பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 135 கருத்தாவாக இருந்தானாம். மக்களாட்சி என்ற பெயரில் இன்று என்ன கருத்தைப் பேசுகிறார்களோ அதே கருத்தை உவமை கூறுவதன்மூலம் கவிஞன் கூறிவிடுகிறான். வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ் உயிரெலாம் உறைவது ஒர் உடம்பும் ஆயினான். - (அரசியல் படலம்-10) (ஒளி பொருந்திய அணிகள் பூண்டவனும் சிம்மம் போன்ற வலியுடையவனும் ஆகிய தசரதன், சரம் அசரம் ஆகிய அனைத்துயிர்களையும் தன் உயிரைப் போலவே விரும்பிக் காப்பாற்றுவதால், எல்லா உயிர்களும் தங்கி வாழ்கின்ற உடம்பாக இருந்தான்.) தன்னாட்டில் வாழும் மக்கள் முதல், எந்த உயிராக இருப்பினும், அவை விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றும் உடம்பாக இருந்தான். இந்த உவமையைக் கூற வரும்பொழுது 'மடங்கல் மொய்ம்பினான்’ என்று கூறுவதிலும் ஒர் ஆழ்ந்த கருத்துண்டு. தன்னுள் உறையும் உயிர் விரும்பியதை உடம்பு செய்ய வேண்டியது கடமை என்றாலும், செய்வதற்குரிய ஆற்றல் அந்த உடம்பில் இருக்க வேண்டுமே! அது இல்லா விடில், உயிர் எதனை விரும்பினாலும் உடம்பு அதனை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினாலும், அதனைச் செய்து முடிக்கும் திராணி இல்லை என்றால் என்ன பயன்? எனவேதான் கோசல மக்கள் எதனை விரும்பினாலும் அதனைச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன் தசரதன் என்பதை அறிவிக்கவே மடங்கல் மொய்ம்பினான் என்று கூறுகிறான். வன்புலி மொய்ம்பினான் என்று கூடக் கூறி இருக்கலாம். ஆனால் புலி தேவை இல்லாமலும் தன்னாற் றலைப் பயன்படுத்திப் பிற விலங்குகட்கு ஊறு செய்யும் இயல்பு உடையது. விலங்குகளின் அரசனாக உள்ள சிம்மம் அவ்வாறு ஒருநாளும் செய்யாது. மக்கள் தவறான ஒன்றைத்