பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 137 செலுத்திப் பிள்ளை வளர்ப்பதுபோல் பயிரைப் பாது காப்பான் வறிஞன். இந்த ஒரு செய் தவிர வேறு நிலம் அவனிடம் இல்லையாகலின், அவனுடைய முழுக் கவனமும் இந்த நிலத்திலேயே பாய்ந்து நிற்கும் அல்லவா? அதே போலத் தசரதன் மக்களிடம் நேரிடையாய் பழகி, அவர்கள் குறைகளை நேரே கண்டு அவற்றைப் போக்கி விடுவதுடன், அவனுடைய கவனம் முழுவதும் மக்கள் நலத்திலேயே பாய்ந்து நின்றது என்பதையும், கவிஞன் இந்த உவமை மூலம் பெற வைக்கிறான். . அரசகுமரனும் குடிமக்களும் அதிகாரம் ஆளை வீழ்த்திவிடும்; யதேச்சாதிகாரம் <!goot (p(p6Mg/lossé, oft;gloGolb (Power corrupts and absolute powercorrupts absolutely) srsörprrgår sorrữ - eļģ_gir என்ற அரசியல்ஞானி. தசரதன் மக்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என்று கூறியிருந்தாலே அது சிறப்புடையதாகும். அதற்குப் பதிலாகத் தசரதன் நீண்ட காலம் குழந்தைச் செல்வம் இல்லாமல் இருந்து பெற்ற, அருமை மைந்தனாகிய இராமன் மக்களிடத்தில் எவ்வாறு பழகுகிறான் என்பதைக் கூறுகிறான் கவிஞன். கிழவனாகிய தசரதன் இவ்வாறு செய்தான் என்றால், வாழ்வில் பெற்ற அனுபவத்தால் கடைசிக் காலத்தில் இந்த உயர்ந்த பழக்கத்தை மேற்கொண்டான் போலும் என்று நாம் நினைக்கவும் கூடும் அல்லவா? எனவே நீண்டகாலம் கழித்துப் பிறந்தவனாய், பட்டத்துக்குரியவனாய், தந்தையின் அன்புக்கு முழுப் பாத்திரனாய், சகோதரர் களால் தெய்வம்போல் வைத்துப் போற்றப்படுபவனாய், செல்லமான அரசியின் செல்வ வளர்ப்பு மகனாய், வசிட்டனின் தலைமைச் சீடனாய், இளமை மிடுக்குடன் இருப்பவனாய் உள்ள இராமனை எடுத்துக் கொள்கிறான் கவிஞன்.