பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 + கம்பன் - புதிய பார்வை இத்தகைய இளங்குமரன் மக்களிடம் எவ்வாறு பழகு கிறான்? அதிலும் மேட்டுக்குடி மக்களிடமோ, பெரிய வணிகர்களிடமோ, முனிவர்களிடமோ அல்ல; மிகச் சாதாரண, மிக எளிய மக்களிடம் எவ்வாறு பழகுகிறான்? என்பதை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறான். இராமனை உள்ளிட்ட சோதரர் நால்வரும், வசிட்டன் இருப்பிடம் சென்று கல்வி கற்றுவிட்டு, மாலையில் அரண்மனை திரும்புகின்றனர். இந்நிலையில் அவர்கள் இரதத்தில் வருவதாகக் கம்பன் கூறவில்லை. நடந்தே வருகின்றனர். பிள்ளைகளைச் சுற்றிக் காவல் காத்துக் கொண்டு யாரும் படைவீரர்கள் வரவில்லை. இவற்றை எல்லாம் கவி வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் இத்தனை பொருளும் அமையுமாறு கவிதை அமைக்கின் றான். சாலையில் நடந்துவரும் முறையிலேயே மூத்தவ னாகிய இராமன் மக்களிடம் செலுத்தும் அன்பும் பக்தியும் தெரிகின்றது. எதிரே வருபவர்களை நிறுத்திச் சக்கர வர்த்தித் திருக்குமரன் அளவற்ற கருணையின் பிரதிபலிப்பு முகத்தில் படரப் புன்சிரிப்புடன் "என்ன பணி செய்கின் lர்கள்? உங்கள் வாழ்க்கையிலோ, மேற்கொண்ட பணி களிலோ ஏதேனும் இடர் உளதா? தங்கள், இல்லத்தரசியும் அறிவு நிரம்பிய மைந்தர்களும் நலமாக உள்ளனரா?” என்று வினவுகின்றானாம். எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன் முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா, எதுவினை? இடர் இலை? இனிது நும்மனையும்? மதிதரு குமரரும் வலியர் கொல்? எனவே. (திருவவதாரப் படலம்-132) ஏழை எளிய மக்களிடம் மன்னனாக வரப்போகின்ற துடிப்புடைய இளைஞன் எவ்வாறு பழகுகிறான்? எவ்வாறு அவர்களை இழுத்து வைத்துப் பேசுகிறான்? என்பதை மட்டுங் கூறி இருப்பின், இது அரசியல்வாதியின் பேச்சுப்