பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 139 போலும் என்று நாம் நினைத்துவிடக் கூடாது என்பதற் காகவே, இராமனின் கருணை வெள்ளத்திலிருந்து வரு கின்ற பேச்சுக்கள் இவை எனக் கவிஞன் கூறுகிறான் போலும்! இக் காப்பிய நாயகன் பிற்காலத்தில் எவ்வாறு வாழப் போகிறான் என்பதை அறிவிக்கவும் இதை ஒரு முன்னுரையாகக் கவிஞன் பயன்படுத்துகிறான். அப்பாவி ஆகியவனும் அன்பின் வடிவானவனும் ஆகிய குகன், சந்தேகப் பிராணியாகிய சுக்ரீவன் ஆகிய இருவரையும், மனமார ஏற்றுக்கொண்டு தம்பியர் உரிமை வழங்கப் போகிறவன், அப் பண்பைத் திடீரென்று பெற்றுவிட வில்லை. அவனிடம் இயற்கையிலேயே அது அமைந் திருந்தது என்பதைக் காட்டவே இந்த நிகழ்ச்சியைக் கவிஞன் காட்டுகிறான். அகப்பற்று, புறப்பற்று (அகங்காரம், மமகாரம்) என்ற இரண்டையும், அறவே சுட்டெரித்துப் புலன்களை அடக்கிய வன்தான். உலகிலுள்ள அனைத்து உயிர் களிடமும் அன்பு செலுத்த முடியும். தொடர்புடையார் மாட்டு மட்டும் செல்வதை அன்பு என்றும், யாவர் மாட்டும் செல்வதை அருள் (கருணை) என்றும் நம்மவர் பிரித்துக் கூறினர். அன்பு இருப்பதுபோல நடிக்கலாம்; பேசலாம். ஆனால், மனத்தில் உள்ளதைக் கண்ணாடிபோற் காட்டும் முகமும், கண்ணும், இது நடிப்பா, உண்மையா என்பதைக் காட்டிவிடும். இராமனிடம் இருந்தது கருணை (அருள்) என்று கூறிய கவிஞன், அது தூய்மையானதும் உண்மையானதும் ஆகும் என்பதை, முகமலர் ஒளிரா என்ற சொற்களின் மூலம் காட்டிவிடுகிறான். அரசனாக உள்ள தந்தையையும், அரசனாக வரப் போகிற மகனையும் கண்டோம். இனி அரசனாக உள்ளவனிடம் அமைச்சர் களாகப் பலர் இருந்தனர். அவர்களைக் கம்பன் எவ்வாறு காட்டுகிறான் என்பதையும் சற்றுக் காணலாம்.