பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கம்பன் - புதிய பார்வை கம்பன் கண்ட அமைச்சர்கள் நல்ல குடியிற் பிறந்து, பல கலைகளையும் கற்றுத் தேர்ந்து, கேள்வி ஞானம் மிகுதியும் பெற்று, இவற்றின் பயனை அடைந்தவர்கள். இவர்களே வஞ்சம் அற்றவர்கள்; அறநெறியை நிலை நிறுத்துபவர்கள். நடப்பதைக் கொண்டு என்ன நடக்கும் என்பதை உணரும் ஆற்றல் பெற்றவர்கள். தீமை வினைவயத்தான் வரினும், அதுபற்றிக் கவலை கொள்ளாமல், அதனையும் மாற்றும் திறம் வாய்ந்தவர்கள். பரம்பரையாக நற்குடியில் தோன்றியவர்கள், அரிய அரசியல் நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர்கள். எல்லாவற்றையும்விட மானமே பெரிது’ என எண்ணும் இயல்பினர் என்ற பொருளில், குலம்முதல் தொன்மையும் கலையின் குப்பையும் பலமுதல் கேள்வியும் பயனும் எய்தினார் நலமுதல் நலியினும் நடுவு நோக்குவார் சலம்முதல் அறுத்து, அரும் தருமம் தாங்கினார். உற்றது கொண்டு, மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார் மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர், பிறப்பின் மேன்மைப் பெரியவர்:அரிய நூலும் கற்றவர், மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் (மந்திரப் படலம்-5, 5) இத்துணைப் பண்புகள் இருந்தும் தம்முடைய முன்னேற்றம், வாழ்வு என்பதில் அதிகம் நாட்டம் உடையர் ஆயின், எப்படியாவது அரசனின் அன்பைப் பெற்றுத் தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தன்னலம் தோன்றிவிடும். அவ்வாறு தன்னலத்துக்கு இடம் தந்துவிட்டால், அரசனுக்கு அறிவுரை கூறுபவர் களாக இல்லாமல் "ஆமாம் சாமிகளாக' ஆகிவிடுவர்.