பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 141 ஒட்டுப் போடும் கூட்டத்தார் என்பதால் அவர்கள் என்ன தீமை செய்யினும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக அவர்கட்கு உதவும் இக்கால அரசியல் வாதியாகவே அவ்வமைச்சர்களும் ஆகிவிடுவர். கம்பன் தான் கண்ட நாட்டில் அமைச்சர்கள் அவ்வாறு இல்லை என்பதை நன்கு தெரிவிக்கிறான். தம்உயிர்க்கு இறுதி எண்ணார்; தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின்று உரைக்கும் வீரர்; செம்மையின் திறம்பல் செல்லாத் தோற்றத்தார்; தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார்; ஒருமையே மொழியும் நீரார். (மந்திரப் படலம்-8) (தங்கள் உயிருக்கு ஊறு விளையுமோ என்று அஞ்சு பவர் அல்லர். அரசன் சினந்தாலும் அச் சினத்தைத் தாங்கிக்கொண்டு நீதியை விடாமல் இடித்துச் சொல்லும் இயல்பினர். நேர்மையிலிருந்து சிறிதும் தவறாதவர்கள். முக்காலத்தையும் அறிபவர்கள். தாம் பலராயினும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறாமல் அனைவரும் ஒருவராகவே நின்று உறுதி கூறும் இயல்பினர்.) இவர்கள் தலையாய அமைச்சர்கள் என்பதற்கு மூன்று இயல்புகளைக் கவிஞன் சிறப்பாகக் காட்டுகிறான். எதிலும் பற்றுள்ளவன் மானத்துடன் இருத்தல் முடியாது. பற்றுடைய பொருளை அடைய வேண்டும் என்று நினைத்தவுடன் அதற்காக எடுக்கும் நியாயமான, நியாயமற்ற முயற்சிகளில் மானம் காற்றில் பறந்துவிடும். எனவே, அமைச்சர்கள் மானம் பேணுபவர்கள் என்பதன் மூலம் எவ்வித ஆசையும் இல்லாதவர்கள் என்பதை வலியுறுத்துகிறான். அடுத்தது, நடுவுநிலை தவறாதவர்கள் என்பதாகும். பெரிய பதவியும் அதிகாரமும் வகிப்பவர்கள்,