பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 + கம்பன் - புதிய பார்வை நடுவுநிலைமை மேற்கொள்ளல் கடினம். எந்த நேரமும் பதவிச் சட்டையைக் கழற்றத் துணிந்தவர்களே நடுவு நிலைமை பிறழாது இருத்தல் கூடும். மூன்றாவதாக உள்ளது மிகப்பெரிய சாதனை. அறிவுடையவர்கள் இருவர் கூடினால் இரண்டு கருத்துகள் இருக்கும். பல அமைச் சர்கள் கூடிய இடத்தில், ஒவ்வொருவரும் தத்தம் கருத்தையே அரசன் கேட்க வேண்டும் என்று நினைத்தால் என்ன ஆகும்? அகங்காரம்தான் அவ்வாறு நினைப்பதற்குக் காரணம். அது இல்லாதபொழுது அனைவரும் ஒரே குரலில் பேசுவது என்பது எளிதாக நடைபெறக்கூடியதே. இதனால் இது வாழும் அரசு ஆயிற்று; இலங்கை வீழும் அரசாக ஆன காரணம் என்ன? புலனடக்கம் இல்லா நாடுகள் அன்றும் - இன்றும் படைவன்மை, தவ பலம், ஒப்புவமை இல்லா வீரர்களின் தொகுதி முதலிய அனைத்திலும் இலங்கை அயோத்தியைவிட ஒருபடி முன்னேதான் நின்றது. அப்படி இருந்தும் அது அழியக் காரணம் யாது? அதன் தலைவ னான இராவணன் தவறு இழைத்தான்; அதனால் இலங்கை அழிந்தது என்று கூறுவது ஒரளவுதான் பொருந்தும். அப்படியானால் அந்த அழிவின் அடிப் படைக் காரணத்தைக் காண்டல் வேண்டும். ஊர்தேடு படலத்தில் அனுமன் இலங்கையின் மாட்சியை விவரிக்கின்றான். பொன் கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த? மின் கொண்டு அமைத்த? வெயிலைக் கொடு சமைத்த? என் கொண்டு இயற்றிய எனத் தெளிகிலாத.