பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கம்பன் - புதிய பார்வை எல்லைமீறி ஆடத் தொடங்கின அரக்கர்கட்கு! வரபலம் படைபலம் வெற்றி எக்களிப்பு என்பவை தலைக்கேறி விட்டன. அதன் பயனாகப் புலனடக்கத்தைக் கைவிட் டனர்; வீழ்ந்தனர். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (திருக்குறள்-48) இடித்துச் சொல்லும் அமைச்சர் இல்லாத மன்னன் பிறர் வந்து கெடுக்காமல், தானே கெடுவான் என்கிறது உலகநீதி நூல். இலங்கை மன்னன் புலனடக்கத்தின் ஆற்றலைத் தவத்தின் மூலமாகவும் அதனால் பெற்ற வரபலத்தின் மூலமாகவும் நன்கு அறிந்தவன்தான். என்றாலும் என்ன ? புலனடக்கத்தைக் கைவிட்டான்; அதன் பயனாகத் தவறான ஆசை வளர்ந்தது; ஆணவம் தலைக்கு ஏறிற்று. முடிவு அழிவு தவிர வேறு இல்லை. இராமன் இல்லாமலும், கெடும் நிலையை அடைந்து விட்டான் இராவணன். அவனுக்குச் சற்றும் சளைக்காத வர்கள் இலங்கை வாழ் மாந்தர் (அரக்கர்). எனவே அவர்கள் அழிவும் உறுதிப்படுத்தப் பட்டுவிட்டது. புலனடக்கத்தை மேற்கொண்ட நாட்டையும், அதனைக் கைவிட்ட நாட்டையும், கவிஞன் உள்ளங்கை நெல்லிக்கனியெனக் காட்டுகிறான். வேறு எத்துணைச் செல்வமும் வரபலமும் இருந்து என்ன பயன்? அடக்கம் இல்லாதவன் கையில் சேரும் இந்தப் பலம் அவன் அழிவுக்கே துணை புரியும். இன்று அணுகுண்டை வைத்திருப்பவர்கள் இரவுபகல் உறக்கமின்றி அஞ்சு கின்றனர். அடக்கமின்மையால் அமெரிக்கா போன்ற நாடுகள் பெற்றுள்ள செல்வமே அவர்கள் அவலத்துக்கும், துயரத்துக்கும் காரணமாக உள்ளது. பலருக்கும் பயன்பட வேண்டிய செல்வம், கோடிக்கணக்கான மக்களின் பட்டினியைப் போக்கி, அவர்கட்கு வாழ்வு அளிக்க