பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 145 வேண்டிய செல்வம், இன்று அணுகுண்டுகள், ஏவுகணை கள் செய்யப் பயன்படுவதைக் காண்கிறோம். அப்படிப் பட்ட குண்டுகளையும், கணைகளையும் வைத்திருக்கும் இந்த வல்லரசுகள் செல்வத்தை மட்டுமா இழந்தன? இல்லை. உறக்கம், மன அமைதி ஆகியவற்றையும் இழந்து விட்டன. என்னே புதுமை செல்வம் இன்பத்தைத் தருவதற்குப் பதிலாக அமைதி இன்மையை ஏன் தந்தது? அந்தச் செல்வத்தைப் பயன்படுத்த வேண்டிய வழிமுறை தெரியாமல், பிறரை அடிமைப்படுத்த வேண்டும். தாங்கள் கண்ட ஆட்சி முறையையே உலகம் முழுவதும் செலா வணியாக வேண்டும் என்று எண்ணும் எண்ணம் ஏன் அவர்களிடை வந்தது? இந்தச் செல்வம் புலனடக்கம் இல்லாதவர்கள் கையில் கிடைத்தஉடன் அவர்கள் அகங் காரத்தை வளர்த்தது. பிறரை அடிமை கொள்ளத் துரண்டுவது, தான் சிறந்தவன்' என்ற அகங்காரத்தின் விளைவேயன்றோ! எனவே அகங்கார மமகாரம், அவை தோன்றக் காரணமான புலனடக்கம் இன்மை, என்பவை தான், வல்லரசுகளின் துயரத்துக்கு மூலகாரணம் என்பதை நன்கு அறிய முடிகிறது. இவர்கட்கும் இராவணன் போன்ற வர்கட்கும் பொதுத்தன்மை நிரம்ப உண்டு. செல்வம், அதிகாரக் குவிப்பு, அகங்காரம், மமகாரம், புலனடக்கம் இன்மை என்பவை பொதுத்தன்மைகள். - ஒரு நாடு வாழ வேண்டுமானால், அந்த மக்கள் நாகரிகம் பண்பாடு என்பவை நிலைக்க வேண்டுமாயின், புலனடக்கமே அடிப்படைத் தேவை என்பதைக் காட்டுவதே கம்பனுடைய குறிக்கோள்.