பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 + கம்பன் - புதிய பார்வை அவனுடைய கடவுள் வாழ்த்தைக் கண்டோம். உலகில் உள்ள சமயத்தவர் யாவரேயாயினும், கடவுட் பொருளை நம்பும் அனைவரும் ஏற்கக்கூடிய கடவுள் வாழ்த்தாகும் அது. அத்துணைச் சிறப்பு வாய்ந்ததும், அனைவருக்கும் பொதுவானதுமான வாழ்த்தைப் பாடிய பிறகு, அடுத்த பாடலில் நீத்தார் பெருமை பேசுகிறான். இவ்வுலகிடைப் பிறந்து, நம் போன்ற உடம்பைப் பெற்று, நம் போன்ற பொறி புலன்களைப் பெற்று, அதே நேரத்தில் அப்பொறிகளை அடக்கி அகங்கார மமகாரங்களைச் சுட்ட சான்றோர்கள் இறைவனுக்கு மிகவும் அண்மையில் இருப்பவர்களாதலின், 'சிற்குணத்தவர்' என்ற பாடலில் அவர்கள் பெருமை கூறி, அவருடைய குணங்களில் தோய்வது நமக்குத் தேவை என்பதையுங் கூறினான். மூன்றாவது பாடலில் கற்றதனாலய பயன் என்கொல், வால் அறிவன் நற்றாள் தொழார் எனின்' குறள்-2) என்ற குறளை உள்ளடக்கி, பாதம் அல்லது பற்றலர்-வேறு பற்றை நீக்கியவர்கள் என்று முடித்தான். கடவுள் உயிர்கள்மாட்டுக் கருணையுடையவன் இதுவரை அவன் கூறியவற்றிலிருந்து கடவுட் பொருளின் இறப்ப உயர்ந்த தன்மையும், நாமரூபங் கடந்த தன்மையும், கல்வி முதலியவற்றாலும், வேதத்தாலும் எட்ட முடியாத தன்மையும் பேசப்பட்டன. இதனால் சாதாரண மனிதர்கட்கு ஒரு மலைப்புத் தட்டிவிடும். இத்துணை உயர்ந்த பொருள் நாம் இப்பிறவியில் காணவோ, அடையவோ கூடியதன்று என்ற தொய்வு மனப்பான்மை தோன்றிவிடும் அல்லவா? ஆகவே இறைப்பொருளின் இலக்கணங்களையும் இயல்பையும் விரித்துப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு இறைவன் அன்பே வடிவானவன் என்பதை வலியுறுத்தத் தொடங்குகிறான். சமயம் நேரும்பொழுது வைணவப் போராட்டக்காரர் தமக்குத் தக்க முறையில் விடையும் தருகிறான்.