பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 149 வேற்றுமையில் ஒற்றுமை இறைவன் ஒருவனே என்பதையும், உலகிடைத் தோன்றி வளரும் பல்வேறு சமயங்களும் அவன் ஆணை யின் வண்ணமே தோன்றின என்பதையும், அவன் அறிந் திருந்தான். அச்சமயங்கள் பல்வேறு காலகட்டங்களில் தோன்றியமையின், அவ்வக் காலகட்டத்துக்கு ஏற்ற முறையில் சில கொள்கைகளை வலியுறுத்தியும், சில வற்றைப் பேசாமல் விட்டும் வழிவகுத்துச் சென்றன. அன்றியும், வெவ்வேறு இடங்களில் தோன்றிய இப் பல்வேறு சமயங்களும் அந்த அந்த இன மக்களுக்கு வேண்டியவற்றை வகுத்துக் கூறின. இவை அனைத்தும் புறத்தில் காணப்படும் வேறுபாடுகளே தவிர, அகத்தில் வேறுபாடு ஒன்றும் இல்லை என்பதையும் அவன் நன்கு அறிந்திருந்தான். எல்லாச் சமயங்களும் பரம்பொருள் ஒன்றே என்பதையும், உயிர்கட்கும் அவனுக்கும் உள்ள தொடர்பையும், இந்த உலகம் பற்றிய அடிப்டையான கொள்கையையும், ஏறத்தாழப் பொதுவாகவே ஏற்றுக் கொண்டிருந்தன. எனவே இவ்வுண்மைகளை நன்கு அறிந் திருந்த கம்பநாடன், இவற்றிற்கு ஒரு வடிவு கொடுக்க எண்ணுகிறான். நேரிடையாகக் கூறுவதைக் காட்டிலும் உவமை மூலம் விளக்குவது எளிது என்பதை உணர்ந்த அவன் ஓர் உவமையைக் கையாள்கிறான். கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைக ளாலும் இயம்ப அரும்பொருள் ஈது என்னத் தொல்லையில் ஒன்றே யாகித் துறைதொறும், பரந்த சூழ்ச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல், பரந்தது அன்றே,