பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 + கம்பன் - புதிய பார்வை தாதுஉகு சோலை தோறும், சண்பகக் காடுதோறும், போது அவிழ் பொய்கை தோறும், புதுமணல் தடங்கள்தோறும், மாதவி வேலிப் பூக வனந்தொறும், வயல்கள் தோறும் ஒதிய உடம்பு தோறும் உயிர் என உலாயது அன்றே. (ஆற்றுப்படலம்-19, 20) (எல்லையற்ற முதல் நூல்களும் அறுதியிட்டுச் சொல்லுதற்கரிய, பொருள் இறைவன்) ஒன்றே என்றாலும், பலவாகிய வேறுபட்ட சமயங்கள் வெவ்வேறு பெயர் களால் அதனைக் கூறுவது போல, மலையிலே பிறந்து, கடலிடைப் புகும் (சரயு) ஆறு, முதலில் ஒரு பெயரைப் பெற்றிருந்தாலும், தான் செல்லும் இடந்தோறும், வெவ்வேறு பெயர்களைப் பெற்றுத் திகழ்ந்தது. மணம் பொருந்திய சோலை, செண்பகக்காடு, அரும்பு மலரும் குளம், மணல் திட்டுகள், மாதவிக் கொடிகளால் சூழப்பெற்ற கமுகத் தோட்டம், வயல்கள் ஆகிய அனைத்திலும் புகுந்து வெளிப்பட்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன முதலிய பல்வேறு பெயர்களைப் பெறும் ஒரே உயிர்போலச் சரயு பல பெயர்களைப் பெற்றது.) இரு பாடல்களில் கொள்கை விளக்கம் 'கல்லிடை என்ற பாடல் மிக ஆழமான பொருளைக் கொண்டு விளங்குகின்றது. கம்பநாடனுடைய கடவுட் கொள்கையை மிக நுணுக்கமாகவும் சுருக்கமாகவும் வெளியிட இப்பாடல் உதவுகிறது. இந்த உவமையைச் சற்று விரித்துக்கண்டால் பலவற்றை அறியலாம். கல்லிடை ஆறு பிறப்பதைக் கூறித் தொடங்கினாலும் அதன் முதல் நிலையாகிய கடலிடைப் பிறப்பதையும் மனத்துக் கொள்ள வேண்டும். கடல் என்பது அகல, நீள, ஆழங் காண முடியாததாய் உள்ள நீர்ப்பரப்பு அன்றோ! அதேபோல மூலப் பரம்பொருள் எல்லை அற்றதாய் உள்ளது. கடல்