பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 + கம்பன் - புதிய பார்வை என்ற அரிய கருத்தைப் பரந்த சூழ்ச்சி என்ற சொற் களாலும், துண்மையாக உள்ளவையும் இறைவனே என்பதை 'உயிர் என உலாயது என்ற சொற்களாலும் கூறி, ஒரு மாபெருங் கருத்தை இரண்டு உவமைகள் மூலம் விளக்கிய பெருமை, கம்பநாடனுக்கே உரியது என்பதை அறிய முடிகின்றது. தனக்கென ஒரு குறிப்பிட்ட வடிவமோ, குணங்களோ இல்லாத நீரை உவமையாக எடுத்துக் கொண்டது அவன் நுண்மான் நுழைபுலத்துக்குச் சான்றாக உள்ளது என்றாலும், ரூபமற்ற பரம்பொருளுக்குப் புதுப்பொருளான நீரை உவமை கூறியதில் ஒரு சிறு குறை ஏற்படத்தான் செய்கின்றது. இலக்கண நூலார் ஒரு புடை ஒத்தவை உவமிக்கப்படும் பொருளாகலாம்' என்று கூறியுள்ளார்கள். ஆதலின் கம்பநாடனுடைய ஆற்றுநீர் உவமையில் எவ்விதத் தவறும் நேர்ந்துவிடவில்லை. எனவே, ஒரே பரம்பொருளுக்கு ஏன் இத்தனை பெயரிட்டு இத்தனைச் சமயத்தவர்கள் கூற வேண்டும் என்ற இன்றியமையாத வினாவுக்கு விடைகூறும் அளவிற்கும் அதனைப் பயன்படுத்திக் கொண்டான் கவிஞன். இந்த உவமையால் நுண்ணியதாக அறியப்படும் கருத்து ஒன்றும் கிடைக்கிறது. ஒரே நீர், பருப்பொருளாகவும் (பனிக்கட்டி), நீர்ப்பொருளாகவும் தண்ணிர்), நுண்பொருளாகவும் (ஆவி மாறும் இயல்புடையதாகலின், பருப்பொருள் நிலை (பிரபஞ்சம்), நீர்ப்பொருள் நிலைமை (உயிர்கள்), நுண்பொருள் நிலை (கருத்துக்கும் எண்ணத்திற்கும் அடங்காத நிலை) என்ற மூன்று இயல்புகளையும் ஒரே பரம்பொருளுக்கு ஏற்றிக் காண முடிகிறது. இரண்டாவது உவமையாலும் மற்றொரு கருத்தைப் பெற வைக்கின்றான். உடம்பு வகையால் எடுத்துக் கொண்டால் நீந்துவன, ஊர்வன, பறப்பன, திரிவன என்ற பல்வேறு உடம்புகளுடன் வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருப்பினும், அனைத்துள்ளும் உறைவது உயிர் ஒன்றே