பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 153 என்று கூறுவதால் இறைபொருளின் பரந்து நிற்கும் நிலையை சர்வ வியாபகத் தன்மை அறியுமாறு கூறுகிறான். இதைவிட அரிய கருத்து ஒன்றும் இந்த உவமையால் கிடைக்கின்றது. அற்பம் என்று நாம் நினைக்கும் புழுவிலும், மிக உயர்ந்தவன் என்று மார்தட்டிக் கொள்ளும் மனித உடம்பிலும், உள்ளே இருப்பது ஒரே உயிர் என்று கவிஞன் கூறுவதால், புழுவும் மனிதனும் ஒன்றே என்ற மிக உயர்ந்த தத்துவக் கருத்தையும் கூறியவாறு ஆயிற்று. அனைத்தும் பரம்பொருளே இக்கருத்தை மேலும் வலியுறுத்துவான் வேண்டித் தன் கருத்தாக எங்கெங்கெல்லாம் பேசமுடியுமோ, அங்கங் கெல்லாம் பேசுகிறான். ஒவ்வொரு காண்டத்திலும் கடவுள் வாழ்த்தாக ஒவ்வொரு பாடலை அமைப்பதன் மூலம் கவிஞன் தன் கடவுட் கொள்கையைப் பேச வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்கிறான். பரம்பொருள் எங்கோ ஒர் இடத்தில் நம் அறிவுக்கு எட்டாத இடத்தில் இருக்கிறது என்று கருதுபவர்கள் நினைவை அகற்ற விரும்பி அங்கங்கே இக்கருத்தை வலியுறுத்துகிறான். வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி ஊனாகி, உயிராகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய் கோனாகி, யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாய்!. (திருவாசகம் - 15) ஞாலமே! விசும்பே! இவை வந்து போம் காலமே உனை என்று கொல் காண்பதே? ( "47) திரியும் காற்றோடு, அகல்விசும்பு திணிந்தமண் கிடந்த எரியும் தீயோடு, இருசுடர் தெய்வம் மற்றும், மற்றும் முற்றுமாய். - (நாலாயிரம்-2362)