பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 + கம்பன் - புதிய பார்வை என்று மணிவாசகரும், நம்மாழ்வாரும் பாடிச் சென்றனர். இவ்வாறு கூறும் இருவரும் முறையே சிவன், திருமால் என்பவர்களே இவ்வாறு உள்ளனர் என்பர். இவ்வாறு முறையே தத்தம் சமயப்பிரிவின் சிறப்பைக் கூறவந்தவர் ஆகலின் அவ்வச் சமயம் இறைவனுக்கு இட்டுள்ள பெயரால் இதனைக் குறிப்பர். எளிவந்த தன்மை இந்த பிரிவினைகளைத் தகர்த்துச் சமரசம் காண முற்பட்ட கம்பநாடன், ஒரே பாடலில் இந்தத் தத்துவ பூர்வமான கருத்தைக் கூறுவதுடன், இறைவனின் எளிவந்த தன்மையையும் (செளலப்பியம்) உடன் சேர்த்துக் கூறுகிறான். இறப்ப உயர்ந்த பொருள் என்று கூறினால் எளியவராகிய மனிதர்கள் அப்பொருளுக்கும், தமக்கும், எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கருதி விட்டு விடுவார்களோ? என்று ஐயுற்ற கவிஞன், அதன் எளிவந்த தன்மையையும் சேர்த்தே பாடுகிறான். வான் நின்று இழிந்து, வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும் ஊனும் உயிரும், உணர்வும் போல், உள்ளும் புறத்தும் உளன் என்பகூனும், சிறிய கோத் தாயும் கொடுமை இழைப்பக் கோல் துறந்து கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் அயோத்தியா காண்டம்-வாழ்த்து (மேலே உள்ள பரம்பொருளே இறங்கிவந்து, ஐம் பூதங்களில் நிறைந்து, உடல், உயிர், உணர்வு என்பவற்றின் உள்ளும் புறமும் இருக்கிறது. அதே பொருள் கூனி, சிற்றன்னை என்பார். செய்த கொடுமையால் அரசு துறந்து, காடும் கடலும் கடந்து இமையோர் துயர் துடைத்தது.)