பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 155 ஏனைய நாட்டார் போல, இத் தமிழர், பரம்பொருளை இவ்வுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத ஒரிடத்தில் இருப்பதாகக் கூறுவதில்லை. கருணையே வடிவான பொருள் ஆகலின், யார் கடுந்துயரால் அவதியுற்றுத் தன்னைச் சரண் அடைகின்றார்களோ, அவர்கள் பொருட்டு இறங்கி வந்து துயர்துடைக்கும் பணியைச் செய்கிறது என்ற இதே கருத்தை மணிவாசகரும் கூறுதல் காணலாம். கனவேயும் தேவர்கள் காண்பரிய கனை கழலோன் நனவே எனைப் பிடித்து ஆட்கொண்டான்...! தேவர்கோ அறியாத தேவதேவன் (தெள்ளேனம் - 1) செழும் பொழில்கள் பயந்து, காத்து, அழிக்கு மற்றை யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான் (சதகம் - 30) சமயப் பிரிவினை வேண்டா சமயப் பிரிவினையாளர் கூறும் பெயர்களைக் கூடு மானவரை கூறாமல், இறைத்தன்மையின் சிறப்பை வெளிப்படுத்துகிறான் கவிஞன் என்றாலும், அவன் காலத்தில் மலிந்திருந்த இந்தப் போராட்டத்தையும் அவன் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. எனவே அவனையும் மீறி ஓரிரு இடங்களில் இப் பிரிவினையாளரைச் சாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தென்திசை செல்லும் வாணர வீரர்கட்கு (அனுமன் செல்லும் குழு, வழி கூறி வரும் சுக்ரீவன், அவர்கள் செல்லும் வழியில் அருந்ததி மலை என்ற ஒன்று குறுக்கிடும்; அம்மலையினுள் நுழைந்து செல்லல் இயலாத காரியம் எனக் கூற வருபவன், ஓர் அற்புதமான உவமையைக் கையாள்கிறான். அரன் அதிகன், உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவு இலோர்க்குப் பரகதி சென்று அடைவு அரிய பரிசேபோல் புகல் அரிய பண்பிற்று ஆமால் நாடவிட்ட படலம்-24)