பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கம்பன் - புதிய பார்வை இறைவனுக்கு உள்ளதாக நாம் கூறும் இயல்புகளுள் இன்றியமையாதது அவன் கருணையாகும். 'கருணைக் கடல் என்று சான்றோர் இறைவனைக் கூறுவர். எனவே பரம்பொருளின் அவதாரமான தன் காப்பிய நாயகன், கருணையின் உறைவிடம் என்பதைக் காட்டிக்கொண்டே செல்கிறான். மிக மிகக் கீழே இருப்பவர்களிடமும் எவ்விதக் கைம்மாறும் கருதாமல் அருள் பாலிக்கின்றான். பயன் கருதாத, துய்மையான அன்பை இராமன் சந்திக்க வேண்டும். அதனை அவன் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு தன்னை அந்த அன்பில் கரைத்துக்கொள்ள வேண்டும், இத்தகைய சூழ்நிலையைப் படைப்பதற்கு இடம் தேடிக்கொண்டிருந்த கவிஞனுக்கு, ஆழ்வாரின், ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன்னருள் சுரந்து மாழைமான்மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை, உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி! என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட ஆழிவண்ண! நின் அடியினை அடைந்தேன் அணிபொழில் திரு அரங்கத்து அம்மானே! (நாலாயிரம்-1418) வாதமா மகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து காதல் ஆதரம் கடலினுள் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு. ( “1416) என்ற பாடல்கள் கைகொடுத்து உதவின. வான்மீகியின் குகன், கம்பனின் குகனிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன். வான்மீகியின் குகன் இராமனுக்கு முன்னரே அறிமுகமானவன். இராமன் நாடிழந்து வருவதை அறிந்தவன். இராமனைச் சந்தித்து,