பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கம்பன் - புதிய பார்வை வான்மீகத்தில் கங்கையைக் கடக்க நாவாய் உதவிய குகன், இராமனை ஓரிடத்தில் ஏற்றிவிட்டு விடைபெற்றுக் கொள்கிறான். ஆனால் கம்பன் கண்ட குகன் இராமனைப் பிராட்டியோடும், இலக்குவனோடும் ஒடத்தில் ஏற்றிவைத்துத் தானே ஒடத்தை ஒற்றை ஆளாகச் செலுத்துகிறான். இராமனை மூலப் பரம்பொருளாக வடிக்கும் கம்பன், முதன் முறையாக அவன் அன்பர்கட்கு அருள் செய்யும் நிலையை விளக்கவே வான்மீகத்தில் இல்லாத இந்நிகழ்ச்சியை இங்கே புகுத்துகிறான். ஒடம் செலுத்தும்போதே, குகன் தானும் இராமனுடன் உறைய வேண்டும் என்ற கருத்தை அறிவிக் கின்றான். முழு அன்பினில் விளைந்த அந்த வேண்டுதலை மறுக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் இராகவன் நிலை தடுமாறித் தன்னையே குகனுக்குத் தந்துவிடும் அற்புதத்தைக் கம்பன் இதோ பேசுகிறான், அன்னவன் உரைகளோ, அமலனும் உரை நேர்வான், என் உயிர் அணையாய் நீ இளவல் உன் இளையான், இந் நன்னுதல் அவள் நின்கேள்; நளிர்கடல் நிலம் எல்லாம் உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் முன்பு உளெம் ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா, அன்பு உள, இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம். (குகப்படலம்-42, 43) (அந்தக் குகன் (உடன் வருகிறேன் என்று கூறிய) உரையைக் கேட்டு, 'என் உயிர் அனையவன் நீ! இந்த இளையவன் உனக்கும் இளையோன். ஒளி பொருந்திய நெற்றியை உடைய இச் சீதை, நின் கொழுந்தியாவாள். குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகம் உன்னுடையது. உன் ஆணையின்படி நான் இதனை ஆள்கிறேன். முன்பு நால்வராகப் பிறந்தோம். முடிவில்லாத அன்பு என்பது நம்மைக் கட்டுதலால் இனி நாம் ஐந்து பேராக உள்ளோம். என்று இராமன் கூறுவான்.)