பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அ. ச. ஞானசம்பந்தன் + 161 இதற்கடுத்த பாடலில், 'யான் என உரியாய் நீ (44) என்று குகனை இராகவன் பேசுகிறான். அதாவது நீயும் நானும் வேறல்லோம் என்று கூறுகிறான். இராகவனை முதன் முறையாகக் கண்ட பொழுதே, குகன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவனிடம் இழந்துவிட்டான். இராகவன் அதனை உடனடியாக அறிந்து கொள்கிறான். இத்தகைய அன்பை எவ்வாறு கணக்கிடுவது? இத்தகைய அன்பர்களைப் பரம்பொருள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறான் என்று அறிய வேண்டுமாயின் சேக்கிழாரே இதற்கு விடை கூறத் தகுந்தவர். குகன் வருவதற்கு முன்பு, இராமனை வரவேற்றுத் தம் இடையே வைத்துக்கொண்டு உரையாடி, மகிழ்கின்றனர். முனிவர்கள், அவர்களும் இராமனிடம் அன்பு பூண்ட வர்கள்தாம். ஆனால் இராமனைப் பரம்பொருள் என்று அறிந்துகொண்டு, தங்கள் குறைதீர்க்க வந்துள்ளான் என்பதையும் நன்கு தெரிந்துகொண்டு, அவனிடம் காட்டும் அன்பாகும் அவர்கள் அன்பு. சுருங்கக் கூறினால் முனிவர்கள் அன்பு, அறவிலை வாணிகம் ஆம் அன்பைச் செலுத்தி, வீடுபேற்றைப் பெற விரும்புகிறவர்கள் இம் முனிவர்கள். குகன் எந்த ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை. இராமன் பரம்பொருள் என்ற எண்ணமே அவனிடம் இல்லை. ஏனென்றால் பரம்பொருள் என்ற சொல்லுக்கே பொருள் அறியாதவன் அவன். காளத்தி வேடனாம் கண்ணப்பன், காளத்தி நாதனை இன்னான் என்று அறியாமற்கூட, முதன்முறை பார்த்தபோதே அவனிடம் தன்னை இழந்துவிட்டான்; கங்கை வேடனும் அவ்வாறே! இத்தகைய அன்பை இறைவன் ஒருவன்தான் அறிந்து கொள்ள முடியும். இவர்களிடம் அன்பு ஒரு பகுதியாக இருக்கவில்லை. இவர்களே அன்பின் வடிவாக ஆகிவிட் டன. இது ஒரு முழுமாற்றம் (Transformation). கங்கை