பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 + கம்பன் - புதிய பார்வை வேடனும், காளத்தி வேடனும் முறையே இராகவனையும், குடுமித் தேவரையும் காண்பதற்கு முன்னர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களேயாவர். அதாவது தற்போதம், இருவினைத் தொடர்பு, மும்மலக்கட்டு (ஆணவம், கன்மம், மாயை) என்பவற்றை உடையவர்கள். ஆனால் இராமனையும், காளத்தி நாதனையும் கண்டவுடன் இவர்களிடம் இருந்த மேலே குறிப்பிட்ட மூன்றும் அழிந்து விட்டன. காளத்தி வேடனாம் கண்ணப்பரைப் பற்றிக் கூறவந்த சேக்கிழார், இந்த முழு மாற்றம் பற்றி அழகாகக் கூறுகிறார். தன்பரிசும், வினை இரண்டும், சாரும் மலம் மூன்றும் அற அன்பு பிழம்பாய்த் திரிவார்.......... (கண்ணப்பர்-புராணம்-154) இந்த நிலை குகனுக்கு முற்றிலும் பொருந்தும். கங்கை வேடன் இராமனைப் பார்த்தவுடன் கூறிய சொற்கள் штборsu o --&e-a---- ****- உன்னை இங்ங்ணம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான்............ (குகப்படலம்-17) என்பதாகும். 'தன் கண்ணைத் தோண்டி இருக்க வேண்டும். ஆனால் செய்ய முடியவில்லை என்று வருந்துகிறான். இதன் எதிராகக் காளத்தி வேடன் உண்மையிலேயே கண்ணைத் தோண்டித் தான் அன்பு செய்யும் பொருளுக்கு அப்பி விட்டான். இறைவனை விரைவில் அடைய வேண்டுமாயின், தற்போதம் முதலியவற்றை இழந்து, அன்பே வடிவாய் ஆதல் வேண்டும். அவ்வாறு ஆகிவிட்டால் உடனடியாக வீடு கிடைக்கும். காளத்தி வேடன் ஆறு நாளில் வீடு பெற்றான். கங்கை வேடனாம் குகன் இராமனிடம் காட்டிய முழு அன்பால், இராமன் ஒரு பகல் நேரத்திற்குள் இவனை முழுவதுமாக ஆட்கொள்ளுகிறான். முதலில்