பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 + கம்பன் - புதிய பார்வை என்பது திருமந்திரம், குகனுடைய அன்பும், இராமனும் வேறுவேறு என்று நினைப்பது சரி இல்லை. குகனுடைய அன்பே இராமன் என்பதை அறிந்தபின், குகனும் இராமனும் ஒருவரே என்பதை அறிய வாய்ப்புண்டு. இதனை நன்கு அறிந்த நம் முன்னோர் குகப்பெருமாள் என்று கூறினர். வீடன ஆழ்வான், பரதாழ்வான் என்று கூறியதன் அடிப்படை வீடணனும், பரதனும் தம்முடைய தனித்துவம் கெடாமல், இராமனிடம் முழு அன்பு செலுத்தினர் என்பதாகும். அத்துணை அன்பிலும், அவர்கள் தம் தனித்துவத்தை (individuality) இழக்கவில்லை. அதனால் இராம ஈடுபாட்டில் ஆழ்கின்றவர்கள் என்ற கருத்தில் ஆழ்வார்கள் எனப் பெற்றனர். ஆனால் குகன் விஷயத்தில் தனித்துவம் என்ற ஒன்று இல்லை. உப்புப் பொம்மை கடலில் ஆழ்ந்தால் என்ன ஆகும்? அதனுடைய தனித்துவத்தை இழந்து, கடல் எது, உப்புப் பொம்மை எது, என்று பிரித்துக் காண முடியாதபடி ஒன்றாய்விடும். அதேபோலக் குகன் என்ற பக்தன், இராமன் என்ற கடலில் மூழ்கிக் கடலாகவே ஆகிவிட்டான். எனவே பெரிய பெருமாளுடன் சேர்ந்து அடையாளங் காண முடியாமற் போனபடியால். குக ஆழ்வான் என்று கூறாமல், குகப் பெருமாள் என்றே குறிப்பிட்டனர். இவ்வாறு ஆகின்ற குகன் போன்றவர்கள் புலனடக்கம் என்பதை மேற்கொண் டார்களா என்ற வினா நியாயமானதே! இவர்களைப் பொறுத்தமட்டில் பொறிபுவன்கள் அடக்க வேண்டிய நிலையில் இல்லை. சைவ சித்தாந்திகள் கூறுவதுபோல, இவர்களுடைய பொறிபுலன்கள், அந்தக் கரணங்கள் என்பவை, பசு கரணங்களாக (அதாவது மனிதர்களுக்குரிய வையாக இல்லாமல், பதி கரணங்களாக ஆகிவிட்டன. இது புறநடை (exception)இவ்வாறு தம்மை மறந்து, அன்பே வடிவாக மாறித் தம்முடைய கருவி கரணங்களைக்கூட மடைமாற்றம் (Transformation) செய்துவிட்டவர்கள், தாம்