பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 165 செய்யும் செயலுக்குத் தாமே பொறுப்பாக ஆவதில்லை. இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவன் செயலே என்பதையும் அறிதல் வேண்டும். இத்தகையவர் கள்பற்றி அனுபவ ஞானியாகிய மணிவாசகர், சித்தம் சிவ மாக்கிச் செய்தனவே தவமாக்கும் (தோனோக்கம்-6) என்று கூறுகிறார். இதே கருத்தைக் கீதையும் சிறிது மாற்றிப் பேசுகிறது: * ஸ்ர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் கரஜ! அஹம் த்வா ஸர்வ பாபேப்யே மோகூ யிஷ்யாமி மா சுச!! - (அத்தியாயம்-18-6) (எல்லாத் தருமங்களையும் பற்று அறவிட்டு, ஒழித்துவிட்டு, என் ஒருவனையே சரணம் புகுவாய், நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிப்பேன். வருந்தாதே.) குகனுடைய இந்த முழுச் சரணாகதித் தத்துவத்தை இராமன் ஒருவன் மட்டுமே புரிந்துகொண்டு அவனை ஏற்றும் கொண்டான். இராமன் மூலப் பரம்பொருள் என்பதைக் கம்பநாடன் குறிப்பாக இங்கே உணர்த்துகிறான். பிற மொழி இலக்கியங்களில் தெய்வங்கள் உலகிடைப் பிற மொழிகளில் தோன்றிய எத்தனையோ காப்பியங்களில் தெய்வங்கள் மனித வடிவிலும், சுய வடிவிலும் இவ்வுலகிடை வந்து செயலாற்றிய நிகழ்ச்சிகள் பேசப் பெற்றுள்ளன. ஆனால் இவ்வாறு வந்த தெய்வங்கள் மனிதர்களுடைய சட்ட திட்டங்கட்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளாமல், தம் விருப்பம்போல் நடந்துகொண்டதாகவே அக் காப்பியங்கள் கூறும்; காரணம் அவை தெய்வங்கள்! அம்மொழி பேசுபவர்கள் தம் காப்பியங்களில் தெய்வங்கள் அவ்வாறு நடந்து கொள்வதைச் சரி என்றே ஏற்றுக்கொண்டனர். இந்த