பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கம்பன் - புதிய பார்வை நாட்டிலும் பாரதக் கதையில் கிருஷ்ணன் நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். மிகப் பழைய செவி வழிச் செய்திகளான கதைகளையே இந்த இதிகாசங்கள் பேசுவதால் யாரும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கு வதில்லை. இவை எல்லா நாடுகளிலும், எல்லா மொழி களிலும், தோன்றிய பேரிலக்கியங்களில் காணப்பட்ட பொது இயல்புகளாம். வியத்தகு அற்புதங்கள் (miracles) என்பவை எல்லா நாட்டு மக்களாலும் ஒப்புக்கொள்ளப் பட்ட நிகழ்ச்சிகளாகும். மனிதப் பிறப்பின் சிறப்பு இந்த அடிப்படை, எல்லா மொழி இலக்கியங்கட்கும் பொது என்றாலும், கம்பனைப் பொறுத்தமட்டில் வேறு வகையில் அந்தக் கருத்துச் செயல்படுகிறது. அவனைப் பொறுத்தமட்டில், பரம்பொருளே இம் மண்ணிடைப் பிறந்து தொழிற் படுகிறான் என்ற பழைய கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிறான். ஆனால் பரம்பொருளேகூட மனிதனாகப் பிறந்து இந்த உலகில் வாழத் தொடங்கினால், அவனும் மனிதர்கட்குரிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வதுடன், குறிக் கோள் தன்மை பெற்ற மனிதனாகவும் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். நால்வகைப் பிறப்பினுள் மனிதப் பிறப்பே ஆக உயர்ந்தது என்ற எண்ணம் உடையவன் கம்பன். ஆழ்வார்களும், நாயன்மார்களும் மனிதர்களாகப் பிறந்து, இறைவனை நேரே கண்டு, அவனிடம் அடைக்கலமான வரலாறுகளை அறிந்ததுடன், அவர்கள் பாடல்களிலும் ஈடுபடுபவனாகலின், மனிதப் பிறப்பின் சிறப்பை நன்கு அறிந்துகொள்கிறான். எனவே இறைவன் கீழிறங்கிப் பிறக்க விரும்பினால், அவனும் அவனுடைய படைப்புகளுள் தலைசிறந்து விளங்கும் மனித உடம்பையே விரும்பி மேற்கொள்வான் என்ற