பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 169 ஒருவன் நற்குடியில் பிறந்தாலும், அவனை வளர்த்துக் கல்வி கற்பித்து நல்லியல்புகள் அவனிடம் வளருமாறு செய்வது வளர்ப்பவர் கடமை. அறுபதினாயிரம் மனைவி யரைப் பெற்று வாழ்ந்தும் கடைசிக் காலத்தில் நான்கு மக்களைப் பெற்றான் தசரதன். எனவே, இம்மக்கள் எப்படி இருப்பார்களோ என்று பெண்ணைக் கொடுக்க விரும்பும் ஒரு தந்தை ஐயுற்றால், அதில் தவறு இல்லை அல்லவா? எனவே இராமனும் அவன் சகோதரர்களும் எத்தகைய பண்புடையவர்கள் என்பதை விசுவாமித்திர முனியே கூறுகிறான். அதுவும் ஜானகியின் தந்தையாகிய ஜனகனிடம் பின்வருமாறு பேசுகிறான்: திறையோடும் அரசு இறைஞ்சும் செறிகழற்கால் தசரதன் ஆம் பொறையோடும் தொடர்மனத்தான் புதல்வர் எனும் பெயரே காண்!உறையோடும் நெடுவேலாய்! உபநயன விதி முடித்து, மறை ஒதுவித்து, இவரை வளர்த்தானும் வசிட்டன் காண். (அரசர்கள் திறையோடு வந்து வணங்கும் கழல் அணிந்த தசரதன் என்ற பொறை நிரம்பிய மன்னனின் புதல்வர்கள் என்பது பெயரளவில்தான். நீண்ட வேலை உடைய ஜனகனே! உபநயனம் செய்து மறைகளை ஒதுமாறு செய்து, இவர்களை வளர்த்து ஆளாக்கினவன் வசிட்ட முனிவனே ஆம்.) அதிலும் இவ்விராமன் எத்தகையவன் தெரியுமா? உலகில் உள்ள தீவினைகள் செய்த தீவினையின் பயனாலும் முடிவில்லாத வேதங்கள் கூறும் அறம் என்பது செய்த அறத்தாலும், கடகம் அணிந்த நீண்ட கையை யுடைய எழுத முடியாத அழகினை உடைய, கருங்கடல்