பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 + கம்பன் - புதிய பார்வை போன்ற நிறமுடைய இவனைக் கோசலை என்பவள் பெற்றாள்' என்ற பொருளில், விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும், அருங்கடை இல்மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும், இருங்கடகக் கரதலத்து இவ் எழுதஅரிய திருமேனிக் கருங்கடலைச் செங்கணிவாய் கோசலை என்பாள் பயந்தாள் குலமுறை கிளத்துப் படலம்-20 என்றும் முனிவனே பேசுவதால், இராமனின் பண்பு நலங்களைக் கூறியவாறு ஆயிற்று. இராமனின் புலனடக்கம் சீதையை மனம் புணர்ந்த அன்று, இராகவன், இந்த இப்பிறவியில் வேறு ஒரு பெண்ணை மனத்தினாலும் திண்டேன் என்று வாக்குறுதி அளித்ததாக, அப்பிராட்டியே அனுமனிடம் பேசுகிறாள்: - வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய், “இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய். (சூடாமணிப் படலம்-34) இராமனுடைய புலனடக்கம் எத்தகையது என்பதைக் கம்பநாடன் காட்டிவிட்டான். இனி அவனுடைய விருப்பு, வெறுப்பு அற்ற நிலையைக் (சம திருஷ்டி கவிஞன் கூறும் இடம் அறிந்து மகிழ்தற்குரியது. ஒருவன் எத்துணைச் சிறந்த பண்புடையவனாயினும், அவனுடன் கூடவே இருந்து பழகும் மனைவி முதலியவர்களிடம் நற்பெயர் எடுத்தல் மிகமிகக் கடினம். அதனால்தான் கவிஞன் இராமன்