பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 171 மனையாட்டி ஆகிய பிராட்டியைக் கொண்டே இராம னுடைய பண்பாடுகளை விளங்க வைக்கின்றான். இராவணன் சிறையிலிருந்து, அலமந்த, பிராட்டி கணவனின் முகமண்டலத்தைத் தன் மனத்திரையில் கொண்டு வருகிறாள். ஒரு மனிதன் தனக்கு உரியதாகிய ஒன்றைப் பிறர் எடுத்துக் கொண்டார்கள் என்று அறியும்போது துயர் உறுதல், சினங்கொள்ளல் இயல்புதான். ஆனால், இத்தகைய நிலையிலும் ஒருவன் நடுநிலை தவறாமல் இருப்பின், அவன் புலன்களை வென்றவனே ஆவான். பகைவர்கள் இல்லாமல் போன இந்தப் பெரிய நாடு உன் தம்பியதாகும் என்று கைகேயி கூறியபொழுது இராமனின் முகம் மூன்று மடங்கு பொலிந்ததை இப்பொழுது பிராட்டி நினைந்து வருந்தினாள். இந்த அரசச் செல்வத்தை ஏற்றுக் கொள்வாயாக என்ற பொழுதும், உடனேயே இச்செல்வத்தைத் துறந்து வனம் செல்வாயாக என்ற பொழுதும், சித்திரத்தில் மலர்ந்துள்ள தாமரை கூம்பலும், விரிதலும் இல்லாமல் இருப்பதுபோல, ஒரே நிலையில் இருந்த அவன் முகத்தினை நினைந்து பார்க்கிறாள் என்ற பொருளில், தெவ் மடங்கிய சேண் நிலம்-கேகயர் தம்மடந்தை-உன் தம்பியது ஆம் என மும்மடங்கு பொலிந்த முகத்தினன் வெம் மடங்கலை உன்னி, வெதும்புவாள். மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும், இத்திருத்துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். - (காட்சிப்படலம்-19, 20) உணர்ச்சிகட்கு அதிகம் இடம் தராமல், பணி செய்கின்றவனே புலனடக்கம் உடையவனாவான். முதற் போரில் தோற்று, இலங்கை மீண்ட இராவணன் மாலிய வானிடத்தில் இராமன் போர்புரியும் சிறப்பைப்