பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கம்பன் - புதிய பார்வை பலபடியாக எடுத்துக் கூறுகிறான். தன்னுடன் கடும் போர் புரியும்போது இராமன் முகத்தில் கோபத்தின் சாயல் கூடத் தெரியவில்லை என்று கூறுகிறான். "ஆயிரக்கணக் கான அரக்கர்களின் ஆவியைப் பறித்தபோதும், அவமா னத்தைத் தாங்கிக்கொண்டு நான் திரும்பி வருமாறு செய்தபோதும், அவனுடைய முகம், அக் காலத்தில் கூனியின் முதுகில் வில்லுண்டை அடிக்கும்போது எப்படி இருந்திருக்குமோ அதேபோல இருந்ததே தவிர, கோபத்தின் சாயல் ஒரு சிறிதும் இல்லை" என்ற பொருளில், எறித்த போர் அரக்கர் ஆவி எண்இலா வெள்ளம் எஞ்சப் பறித்தபோது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப் பொறித்தபோது, அன்னான் அந்தக் கூனிசுடன் போக உண்டை தெறித்தபோது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை (கும்பகர்ண வதைப்படலம்-17) புலனடக்கத்தால் சினத்தை ஒழித்தவர்கட்கு மன்னிக்கும் பண்பு தானே வந்துவிடும். பழிதீர்த்துக் கொள்ளும் காழ்ப்புணர்ச்சி இராது. எனவேதான் முதற்போரில் யாவற்றையும் இழந்து தனியனாய் நின்ற இராவணனைக் கொல்லாது, ஆள்ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை! இன்று போய்ப் போர்க்கு நாளை வா என நல்கினன்..... (முதல் போர்புரி படலம்-255) இத்தனை பண்புகளையும், தான் படைத்த இராமனுக்கு ஏற்றிவிடுகிறான் கவிஞன். இவ்வாறு எல்லாவிதங்களிலும் மனித நிலைக்கு மிகவும் மேம்பட்ட இயல்பை ஏற்றிவிட்டால் ஒருவேளை அவன் மானுடனே அல்லன் என்ற நினைவு