பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 173 வந்துவிடக் கூடாதே என்பதற்காகப் போலும், இராமன் சராசரி மனிதனாக நடந்துகொள்ளும் இடங்கள் மூன்றையும் ஏற்படுத்தியுள்ளான். மனைவியின் கண்ணிர் பொன்மானைப் பிடித்துத் தரவேண்டும் என்று சீதை கேட்டவுடன், உலகத்தில் எங்குமே பொன்மான் என்பது இல்லாத ஒன்று என்றும், இது அரக்கர் சூழ்ச்சியே என்றும் இளவல் கூறுகிறான். இது கேட்ட சீதையின் முகம் வாடுவதைக் கண்ட இராமன், பொன்மான் இருப்பது இயற்கையில் நிகழக்கூடிய ஒன்றுதான் என்று தருக்கம் பேசுகிறான். இந்த நிலையில் பொன்மானைத் தான் சென்று பிடித்துத் தருவதாக இலக்குவன் கூறுகிறான். அதைக் கேட்ட பிராட்டி, - வாயிடை, மழலை இன்சொல் கிளியினின் குழறி, மாழ்கி நாயக! நீயே பற்றி நல்கலை போலும்! என்னா சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள். (மாரீசன் வதைப்படலம்-67) (வாயிலிருந்து வெளிப்படும் மழலைச் சொல் சினத்தால் குழற, நொந்து, நாயக! நீயே இம்மானைப் பிடித்துத் தரக் கூடாதா?’ என்று கேட்டு, உடனே கண்ணிர் சிந்திக் கோபித்து உள்ளே சென்றுவிட்டாள்.) இவ்வாறு மனைவியின் கண்ணிருக்கு அஞ்சித் தம்பியின் அறவுரையைக் கூட ஏற்காமல் மானைப் பிடிக்கத் தானே புறப்படும் இராமன் சராசரி மனிதனையே நினைவூட்டுகிறான். வனத்தில் பெண்ணைத் தனியே விட்டது சடாயுவை முன்பின் பார்த்திராத இராம இலக்குவர் கள் சீதையுடன், அவனை அறிமுகஞ் செய்துகொண்ட