பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 175 என்று பாடுவதன் மூலம், இராமனுடைய சராசரி மனித மனநிலையை உறுதிப்படுத்துகிறான். மனிதன் என்று பிறந்துவிட்டால், முக்குண வயப்பட்டுத்தான் ஆக வேண்டும். சாதாரண மனிதனுக்குப் பெரும்பகுதி நேரம் தாமச குணமும், ஒரு சில வினாடிகள் சத்துவ குணமும் மேலோங்கி நிற்கும். இராமனைப் போலப் புலனடக்கமும், நடுநிலைமையும் உடையவனுக்கு பெரும்பகுதி நேரம் சத்துவ குணமும், ஏதோ ஒருசில வினாடிகள் தாமச குணமும் நிறைந்து நிற்கும். அவன் எத்துணை உயர்ந்த வனாயினும், இக் குணக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட முடியாது. எனவேதான் இரண்டொரு நிகழ்ச்சிகளின் மூலம், இராமனும் தாமசகுன வசத்தனாக ஒரு சில வினாடிகள் இருந்தான் என்பதைக் கவிஞன் நிலை நாட்டுகிறான். தலைவன் அருள் நிறைந்தவன் புலனடக்கத்தின் பயனாக, நிறைந்த அன்பும், யாவரிடமும் பரந்து பாயும் அருளும் நிறைந்தவனாக இராமன் இருந்தான் என்பதையும் காட்டுகிறான். அன்புக்கும், அருளுக்கும் ஒரு வேறுபாடு காணமுடியும். அது யாரிடம் செல்கிறதோ அவன் அறிந்து தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்பு எதிர்பார்க்கும். அது அறிந்து ஏற்றுக்கொள்ளப்படாத பொழுது மனத்துயரம் உண்டாவது இயல்பே. கடைசிவரை அது ஏற்றுக்கொள்ளப் படவில்லையானால் நாளடைவில் அந்த அன்பு செய்யப்படுபவர்கள் நேரில் இல்லாதபோது அந்த அன்பு வலிமையை இழக்கிறது. ஒயாது பழக வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை; உணர்ச்சி ஒன்றே நட்பை வளர்க்கும் என்ற கருத்தை, புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். (திருக்குறள்-785)