பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அ. ச. ஞானசம்பந்தன் + 177 இராகவன். சுக்ரீவனைக் கண்டவுடன் அவன் கூறிய வார்த்தைகள் கல்லையும் கனிவிக்கும். குற்றமற்ற தவத்தினை உடைய சபரி, இம்மலையில் வந்து நீ தங்கி இருக்கும் நிலையைக் கூறினாள். நாங்கள் அடைந்துள்ள நீக்கமுடியாத பெருந் துயரத்தை உன் உதவிகொண்டு கடக்கலாம் என்று இங்கு வந்துள்ளோம். ஐயனே! நின் உதவி தேவை என்ற கருத்தில் இராகவன் பேசுகிறான். மைஅறு தவத்தின் வந்த சவரி, இம்மலையில் நீ வந்து எய்தினை இருந்த தன்மை, இயம்பினள் யாங்கள் உற்ற கைஅறு துயரம், நின்னால் கடப்பது கருதி வந்தேம்; ஐய! நின்-தீரும் என்ன, அரிக்குலத்து அரசன் சொல்வான். (நட்புக்கோள் படலம்-24) இந்தச் சொற்களையும், இதில் பொதிந்துள்ள எல்லை யற்ற துயரத்தையும் யார் கேட்டிருந்தாலும், உடனே தங்கட்கு என்ன வேண்டும்? நான் எதனையும் செய்யத் தயாராக உள்ளேன்' என்றுதானே விடை கூறி இருப்பர். ஆனால், இந்தச் சுக்ரீவன் உடனே என்ன விடை கூறினான்: இராமன் கூறிய எந்தச் சொல்லும் அவன் காதில் நுழையவில்லை. இராமன் அடைந்துள்ள துயரத்தை அவன் முகமே காட்டுகிறது. அதிலும் இராமன் இப்பொழுது சுக்ரீவனுடைய விருந்தினன், விருந்தாக வந்தவன், கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேன்' என்று அழுகிறான். என்றாலும் விருந்தினன் முகமோ, அன்றி வார்த்தைகளோ சுக்ரீவனை அசைக்க வில்லை. தன்னலத்தின் மொத்த வடிவாக உள்ளான் சுக்ரீவன். அதற்குப் பதிலாக வலுவுடைய தன் கைகளால் அடித்து, என் அண்ணன், என் பிறந்தவனாகிய என்னை உலகம் முழுதும் நான் எங்கு சென்றாலும் துரத்தி வந்தமையால், இக் குன்றில் அடைக்கலம் புகுந்தேன். என் உயிரை விடுவதற்குத் துணிவில்லை. எனவே உன்னைச் சரண் அடைகின்றேன். என்னை எப்படியாவது காக்க