பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கம்பன் - புதிய பார்வை வேண்டியது உன் கடமையாகும்" என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டான் சுக்ரீவன். முரண் உடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை, இருள் நிலைப் புறத்தின் காறும் உலகு எங்கும் தொடர, இக்குன்று அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர் உயிர் துறக்கல் ஆற்றேன்; சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம் என்றான். (நட்புக்கோள் படலம்-25) இவ்வாறு சுக்ரீவன் பேசியதை, இராமனை அல்லாத பிறர் எவர் கேட்டிருப்பினும், "சீ! நீயும் ஒரு மனிதனா? போயும் போயும், உன்னை நாடி வந்தேனே!” என்று கூறிவிட்டுச் சென்றிருப்பர். இதில் வேடிக்கை ஒன்றும் உளது. வந்திருப்பவர்கள் மானுட வடிவினரேனும், உண்மையில் அவர்கள் யார் என்பதைக் கல்விக்கடலாகிய மாருதியே கூறியுள்ளான். மேலும், இந்தச் சுக்ரீவனே இராமனைக் கண்டவுடன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே, மாறி இப்பிறப்பில் வந்தார் (19) என்று கூறியுள்ளான். அப்படி இருக்க, அத்தேவர்க்கெல்லாம் தேவனே, இப்பொழுது கேவலம் குரங்காகிய தன்னை நோக்கி, யாங்கள் உற்ற கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்; ஐய நின்-திரும் (25) என்று பேசுகிறான். சாதாரண அறிவுடையவன்கூட, 'ஐயா! தங்கள் துயரம் என்ன ? என்னால் முடிந்ததைச் செய்கிறேன்' என்று உபசாரத்திற்காவது கூறிவிட்டுப் பிறகு தன் ஒப்பாரியை வைத்திருக்கலாமே! ஆனால் பண்பாடு என்பதையே அறியாத சுக்ரீவன், தன்னலம் என்பதன் மொத்த வடிவமானான். வெந்து, நொந்து வந்து, கேவலம் ஒரு குரங்கிடம் பேசுகிறோமே என்ற நினைவுகூட இல்லாமல்,