பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 179 ஒரு மாவீரன், கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்’ என்று பேசும்பொழுது, பேசப்பட்டவன் இவ்வாறு விடை கூறுகிறான். தன்னலத்தின் மொத்த வடிவத்தின் எதிரே, பண்பின் உறைவிடமானவனும், புலன்களை வென்றவனும், காழ்ப்புணர்ச்சி என்றால் என்ன என்று கூடத் தெரியாதவனுமான இராகவன் நிற்கிறான். சுக்ரீவன் இவ்வாறு பேசியவுடன், அப்பெருந் தகை தன் துயரத்தை மறந்தான்; எதிரே இருப்பவன் துயரத்தை மட்டுமே அறிந்தான். அவன் சரணம் என்று கூறிய சொற்கள் அவன் காதுகளில் விழுந்தவுடன், சரணம் அடைந்தவன் யார்? அவன் தகுதியுடையவனா? என்ற வினாக்களைக் கேட்கவே இல்லை. ஒரு கணங்கூடத் தாமதிக்காமல் இராமன் பேசுகிறான்: மற்று இனி உரைப்பது என்னே? வானிடை, மண்ணில் நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்; உன்கிளை எனது; என் காதல் சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன்உயிர்த் துணைவன் என்றான். (நட்புக் கோள் படலம்-27) 'சுக்ரீவன் என் முன்னவன். என்னைத் தண்டித்தான்' என்று மட்டுந்தான் கூறினானே தவிர, தண்டித்தவன் யார்? ஏன் தண்டித்தான்? குற்றம் யார் பேரில், என்ற ஒன்றையும் கூறவில்லை. வழக்கின் ஒரு பகுதி சுக்ரீவனுடையது. மறுபகுதிக்காரன் யார் என்றுகூடத் தெரியாத நிலையில், இராமன் இவ்வாறு முன்பின் ஆராயாமல் வாக்குத் தரலாமா? என்ன கருத்தில் இவ்வாறு கூறுகிறான் இராமன். உணர்ச்சி வசப்பட்டுத்தான் இவ்வாறு பேசுகிறான் என்பதை மறுக்க இயலாது என்றாலும், இந்த