பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 + கம்பன் - புதிய பார்வை உணர்ச்சி வேகம் தன்னலத்திலோ அன்றித் தன்னலப் பாதிப்பிலோ பிறந்தது அன்று. எதிரே உள்ளவன், ஒரு சாதாரண மனிதனுக்கு இயற்கையாக உள்ள தன் மானத்தை விட்டுவிட்டு, இப்படிப் பரிதாபமாகப் பேசுகிறான் என்பதை, இராமன் ஒரு வினாடியில் புரிந்து கொள்கிறான். உயிரின்மேல் எல்லையில்லாத பற்று வைத்திருக்கும் ஒருவன்தான், இவ்வாறு பேச முடியும். அவன் பேச்சிலேயே கூட ஆர் உயிர் துறக்கல் ஆற்றேன் என்றும் கூறிவிட்டான். எனவே இராமன், தன் எதிரே பெரிதும் இரக்கத்துக்குரிய ஒரு பரிதாபமானவனைப் பார்க்கிறான். விருந்தினரை எவ்வாறு உபசரிக்க வேண்டும், என்பதைக்கூட மறந்துவிட்டு, வந்தவர்கள் எத்துணைத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பதையும் மறந்துவிட்டு, தன் காரியமே பெரிது என்று நினைந்து பேசும், உயிருக்கு அஞ்சிய ஒரு தன்னலப் பிண்டத்தைக் காணும் இராமன், தன்னை மறந்து, தன் கவலையை மறந்து, எதிரே நிற்பவன் துயரத்தை எவ்விதமாகவேனும் மாற்றிவிட வேண்டும் என்று துடிப்பதில், அவனுடைய அருள் உள்ளத்தைக் காண முடிகிறது. சுக்ரீவன் செயல் வேறு எவர்க்குமே வெறுப்பையும், இகழ்ச்சியையும் உண்டாக்கும் செயலாகும். ஆனால் ஒரு கடுகளவுகட வெறுப்போ, அலட்சியமோ, கொள்ளாமல் அவன் துயர் துடைக்க வேண்டும், என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான் இராமன். இந்த நிகழ்ச்சியில் இராமன் தன் நடுநிலைமையைத் துறந்துவிட்டுத்தான் பேசுகிறான் என்பதை அறிய முடிகிறது. இல்லாவிட்டால் அடுத்தவன் வழக்கு யாது என்று அறிந்தபிறகே முடிவு கூற வேண்டும் என்ற சாதாரணச் சட்டத்தை மறந்துவிட்டு, 'அடைக்கலம் என்று ஒருவன் கூறியவுடன் அடைக்கலமாக ஏற்க முன்வரு வானா? தன்பால் அடைக்கலம் என்று வந்தவன் தவறே இழைத்திருப்பினும், அவனைக் காக்க வேண்டியது கடமை