பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 + கம்பன் - புதிய பார்வை காப்பியப் போக்கில் இராகவன் அருள் மிகுதியாலும், இரக்கத்தாலும் கூறிவிட்ட இச் சொற்களை நினைந்து மனம் வருந்தினானோ என்று ஊகிக்கவும் இடம் உண்டு. முற்றிலுமாக சுக்ரீவனை நம்பி வாலியைக் கொன்றாகி விட்டது. உயிர் விடுமுன் வாலி கூறிய வாதங்களால் கலங்கிய இராகவன், தான் செய்தது சரியா என்று ஐயப்பட்டு விடுகிறான். எனவேதான், வாலியின் மைந்தனாகிய அங்கத னிடம் தன் உடைவாளைத் தந்து, தரும் செயல் நிகழ்கின்ற அதே நேரத்தில் நீ இது பொறுத்தி (வாலிவதை-159) என்று இராமன் கூறுவது இவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது. கார்காலம் முடிந்தவுடன் சேனைகளுடன் வருகிறேன் என்று வாக்களித்துச் சென்ற சுக்ரீவன், பெருங் குடிமகனாக மாறி, அனைத்தையும் மறந்து இன்பக் கடலில் மூழ்கி விட்டான். உரிய காலம் வந்தும் சுக்ரீவன் வரவில்லை என்பதை அறிந்த இராகவன் பெருஞ்சினம் கொள்கிறான். தம்பி இலக்குவனை, நோக்கி எல்லையில்லாத செல்வத்தைப் பெற்றதால் செய்யப் பெற்ற உதவியின் அளவை மறந்தான். தன் மதிப்பை இழந்துவிட்டான்; அறத்தை மறந்தான். நம்மிடம் அன்பு இல்லை எனினும் சரி, நம் வீரத்தைக்கூட அறியவில்லையா இவன்? இன்பத்தில் மயங்கிவிட்டான். நன்றி கொன்று, நட்பின் வேரை அறுத்து, சத்தியத்தைச் சிதைத்து தன் சொற்களைக்கூட மறந்து பொய்த்தவனைக் கொல்லுதல் குற்றமன்று. நீ சென்று அவன் மனநிலை என்ன என்று கண்டுவா!' 'அரக்கரை அழித்து, இவ்வுலகில் அறத்தை நிலை நாட்ட எடுத்த வில்லாகிய கோதண்டமும் உள்ளது; யானும் இருக்கிறேன் என்று சொல் என்ற கருத்தில், பெறல் அரும் திருப்பெற்று, உதவிப் பெருந் திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்