பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - புதிய பார்வை 1. கம்பனுக்கு மூலம் யார்? வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் இவ் வண்மைத் தமிழ் மொழியில், ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட இலக்கியத்திலிருந்து நேற்று பிறந்த இலக்கியம் வரை, நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் இன்று இருந்து வருகின்றன. பழமையான கிரேக்கம் போன்ற மொழிகளில் இத்தகைய தொடர்பான இலக்கி யங்கள் இல்லை என்பதையும் அறிதல் வேண்டும். மற்றும் ஒரு சிறப்பையும் இங்குக் கூறல் பொருத்தமுடையதே யாகும். இரண்டாயிரம் ஆண்டு கட்கு முற்பட்ட திருக்குறளை இன்று படிப்பவர்கள்கூடப் பெரும்பகுதிப் பாடல்களை உரை உதவி இல்லாமல் புரிந்துகொள்ள முடியும். இதில் ஏதேனும் சிறப்பு உண்டா என்று சிலர் மனத்திலாவது ஐயம் தோன்றலாம். முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட ஆங்கில நூல்களை, இன்றுள்ள ஒருவர், சிறந்த ஆங்கிலப் பயிற்சி உடையவராயினும், படித்துப் புரிந்து கொள்ளல் இயலாத காரியம். பழைய ஆங்கிலம் என்று அழைக்கப்படும் அம்மொழி இன்றைய ஆங்கிலத்திலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. இது வளர்ச்சி என்று கருதப் பெற்றாலும் முன்பின் தொடர்பு அதிகம் இராத வளர்ச்சி யாகும். - முழு வளர்ச்சி பெற்ற மொழி தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் தைலதாரை என்று சொல்லப்படும் முறையில், வளர்ச்சி முன்பின் தொடர்புடன் இருந்து வருகிறது. இதன் உட்கருத்து ஒன்று