பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 183 அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம் மறம் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான். நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து, ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க் கொன்று நீக்குதல் குற்றத்தின் தங்குமோ? சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய். இம்பர் நல்லறம் செய்ய எடுத்த வில் கொம்பும் உண்டு; அருங்கூற்றமும் உண்டு; உங்கள் அம்பும் உண்டு என்று சொல்லு, நம் ஆணையே! (கிட்கிந்தைப் படலம்-2, 3, 4) இச் சொற்களையும் இன்னும் இவற்றை அடுத்து நான்கு பாடல்களில் கூறப்பெற்ற கொடுஞ் சொற்களையும் பேசியவன் இராமன்! யாரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்? சுக்ரீவனைப் பற்றித் தம்பியாகிய இலக்குவனிடம் இராமன் பேசிய சொற்களே இவை. இராமன் பண்பாட்டின் உறைவிடமாயிற்றே! அவன் வாயிலிருந்து இத்தகைய சுடுசொற்கள் வரலாமா? வரமுடியுமா? என்று சிந்திப்பதில் தவறு இல்லை. எல்லையற்ற சினத்தை இராமன் காட்டி இவ்வளவு பேசினமையால்தான், சுக்ரீவனைப் பொறுத்த மட்டில் தான் நடந்துகொண்ட விதமும், கொடுத்த வாக்கும் சரி இல்லையோ என்ற ஐயம் இராமனின் அடிமனத்தில் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க இடம் உண்டு. இந்தச் சுடு சொற்களின் பின்னே உள்ள சினத்திற்குப் பாதிக் காரணம் சுக்ரீவனுடைய நன்றி மறந்த வாழ்க்கை. எஞ்சிய பாதி இராமன் தன் மேலேயே கொண்ட கோபமாகும். இராமன் தன்மேல் ஏன் சினங் கொள்ள வேண்டும் என்ற வினா நியாயமானதே. அறிவுடைய ஒருவன் தன் அறிவுக்கு ஒவ்வாத செயலை உணர்ச்சி வசப்பட்டுச் செய்துவிட்டால், அந்தச் செயலின் விளைவு, அவன் அறிவு எதிர்பார்க்கும் முறையில்