பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கம்பன் - புதிய பார்வை அமையாமல், எதிர்மறையாக அமைந்துவிட்டால், அந்த அறிவாளன் தன் மேலேயே சினங்கொள்வான். தம்பியின் எதிரே தன்னுடைய இந்தக் குறைபாட்டை (சுக்ரீவனைத் தவறாக எடைபோட்டுத் தன் அருளுக்குப் பாத்திரமாக அமைத்துக்கொண்டது) வெளிக்காட்டாமல், சுக்ரீவன் மேல் சினங்கொண்டதாகக் காட்டிக்கொண்டு பேசுகிறான் இராமன். உண்மையில் இராமன் சினங்கொண்டது சுக்ரிவன்பேரில் அன்று. அதை எவ்வாறு தெரிந்து கொள்கிறோம்? சுக்ரீவன் இராமனிடம் வந்து, செறிமலர்ச் சேவடி முடியின் தீண்டினான். (கிட்கிந்தைப் படலம்-126) உடனே இராமன் தன் சினத்தை மறந்து அவனை எடுத்துத் தழுவிக்கொண்டான். சுக்ரீவன் தன் பிழையை நினைந்து பெரிதும் வருந்தினான். திருந்திழை திறத்தினால், தெளிந்த சிந்தை நீ, வருந்தினை இருக்க, யான் வாழ்வின் வைகினேன். ( "13) என்று கூறினவுடன், இராகவன், - பரதன் நீ! இணையன பகரற் பாலையோ? ( "133) என்கின்றான். தன் பிழையை நினைந்து வருந்தினான் சுக்ரீவன் என்றவுடன் அவனைப் பார்த்து நீயும் பரதனும் எனக்கு ஒன்றுதானே! அப்படி இருக்க நீ வருந்தலாமா? என்று பேசுகிறான் அயோத்தி வேந்தன். தொடக்கத்தில் அவன் கொண்டிருந்த சினம் சுக்ரீவன்மேல் சென்றது உண்மை யானால், இப்பொழுது பரதனைப் போலும் நீ என்று பேசி இருத்தல் முடியாது. எனவேதான், இராமன் கொண்ட சினம் தன் மேலேயே தவிர சுக்ரீவன்மேல் அன்று என்று ஊகிக்க முடிகிறது. சுக்ரீவன் அன்பில்