பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 187 "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று ஏற்றுக்கொண்டு அதன்படியே வாழ்க்கையை நடத்தப் போகிறான் இராமன். இப்பொழுதே அதே தந்தை, முனிவனிடம் இனி இவனுக்குத் தந்தையும் தாயும் நீயே ஆவாய். நின்பால் இவர்களைத் தந்துவிட்டேன்' என்று கூறியதுடன், இயைந்த செய்க என்றும் கூறிவிட்டான். இயைந்த என்றால் பொருத்தமானவற்றைச் செய்க என்பது பொருளாகும். எனவே இளைஞர்கட்கு எது பொருத்தம், எது பொருத்தம் இல்லை என்பதை முடிவு செய்யும் பொறுப்பு இதுவரை தந்தையிடம் இருந்தது. இப்பொழுது முனிவனிடம் மாறிவிட்டது. எனவே, தந்தையும் தாயுமாகி நிற்கின்றான் விசுவாமித்திரன். அம்மட்டோ! இவர்கட்கு எது பொருத்தமான செயல் என்பதை முடிவு செய்பவ னாகவும் உள்ளான் முனிவன். இம்முடிவைச் செய்யும் உரிம்ை பெற்ற அந்த முனிவனும் சாதாரணமானவன் அல்லனே! வசிட்டனால் 'பிரம்ம ரிஷி என்று அழைக்கப்படுபவன்! நான்முகன் தொழிலுடன் போட்டி யிட்டுத் திரிசங்குவிற்காக ஒர் உலகத்தையே படைக்கும் ஆற்றல் பெற்றவன்! இத்தனை எண்ணங்களும் இராமன் மனத்தில் தோன்றியதால், தருமசங்கடமான நிலையில் அவன் ஏற்கும் முடிவில் தவறு கூற இயலவில்லை. இத்துணைப் போராட்டத்தையும் கவிஞன் தனக்கே உரிய முறையில் பேசுகிறான். அண்ணல் முனிவற்கு அதுகருத்து எனினும், ஆவி உண் என, வடிக்கணை தொடுக்கிலன்; உயிர்க்கே துண் எனும் வினைத் தொழில் தொடங்கி உள்ளேனும் பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் (தாடகை வதைப்படலம்-36) இவளைக் கொல்ல வேண்டும் என்பதே முனிவன் கருத்து என்பதை இராமன் அறியினும், உயிரைக் குடிப்பாய் என்று முனி கூறினும், அம்பு தொடுக்கவில்லை.