பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 189 நடுங்குபவன் தசரதன். ஆனால் மைந்தனோ அவன் சினந்திருந்தால் ஒரு புன்சிரிப்புடன் அதனை ஒதுக்கி யிருப்பான். எனவே தான் முனி சினக்கவில்லை! புலனடக்கமும் நடுநிலையும் உடைய ஸ்திதப் பிரக்ளு னாகிய இராமனிடம் தருக்க முறையில் அறிவுக்கு ஏற்ப அமைதி கூறவேண்டுமே தவிர, வேறு எந்த வழியிலும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த முனிவன், தன் வாழ்நாளில் யாரிடமும் காட்டாத பொறுமையை மேற்கொண்டு, எட்டுப் பாடல்களில் தருக்க அடிப்படையில் சமாதானம் கூறுகிறான். --- ******** ---------- **** * *ஐய! பின்னும் தாழ்குழல் பேதைமைப் பெண் இவள் என்னும் தன்மை, எளிமையின் பாலதே! (தாடகை வதைப் படலம்-43) (கொல்வதையே தொழிலாகவுடைய இவளை, நீண்ட கூந்தலையும், பேதைமையையும் இயல்பாகப் பெற்ற, பெண் என்று கருதுவது அறிவுடைமையாகாது.) முனிவன் வாதம் இவ்வாறு கூறிக்கொண்டே வருகையில், முனிவன் இராமன் முகத்தைக் கவனித்துக்கொண்டே வருகிறான் என்று ஊகிக்க வேண்டியுளது. இந்த வினாடிவரை இராமன் முடிவில் மாற்றம் தெரியவில்லை. தான் அவளால் துன்பமுற்ற பிரதிவாதி என்பதால், தன் சொற்களை இராமன் முற்றிலுமாக நம்பவில்லை போலும் என்று கருதிய முனி, இறுதியாக ஐயனே! முடிவில்லாத அறத்தை நன்கு ஆய்ந்துதான் இவ்வாறு கூறினேன். இவள்மேல் கொண்ட கோபத்தாலோ, காழ்ப்புணர்ச்சி யாலோ நான் இதனைக் கூறவில்லை. நீ வாளா இருப்பது சரியில்லை. இவனை உடனே கொல்வாயாக’ என்ற பொருளில்,