பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 + கம்பன் - புதிய பார்வை ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவள் சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்; ஆறி நின்றது அற்ற அன்று, அரக்கியைக் கோறி என்று, எதிர் அந்தணன் கூறினான். (தாடகை வதைப்படலம்-44) ஒருதலைப்பட்சமாக நின்று தான் இந்த முடிவுக்கு வரவில்லை; விருப்பு வெறுப்புக்கு இங்கு இடம் இல்லை' என்று கூற வந்த கோசிகன், முடிவில்லாத அறத்தை ஆய்ந்துதான் இவ்வாறு கூறுகிறேன்' என்று கூறியது, இராமனுடைய சிந்தனையைத் தூண்டிற்று. அறம் யாது என்பதை நூல்கள் மூலம் அவன் நனகு அறிந்துள்ளான். ஆனால் அந்த நூல்களில் தன்னைப்போல் பயிற்சி பெற்றவனும், தேவை ஏற்பட்டால் அறச் சட்டங்களையே இயற்றக்கூடிய பேராற்றல் பெற்றவனுமாகிய கோசிகமுனி, 'நல்அறம் பார்த்துத்தான் இவ்வாறு கூறுகிறேன் என்று வேறு கூறிவிட்டான். மேலும், தான் உணர்ச்சிவசப்பட்டோ, தன்னலத்தாலோ இவ்வாறு முடிவு செய்யவில்லை என்றும் முனிவன் கூறியபிறகு, இராமன் என்ன செய்ய முடியும்? இந்த நிலையில் இராமன் எத்துணைப் பெரிய தரும சங்கடத்தில் அகப்பட்டுள்ளான் என்பதை நினைந்து பார்த்தல் வேண்டும். எழுத்தில் வடிக்கப்பெற்றுள்ள சட்டம் பெண்ணைக் கொல்லுதல் கூடாது என்று கூறுவது உண்மைதான். அச் சட்டத்தின் எழுத்து முறையை மதிக்க வேண்டும என்று நினைக்கிறான் இராகவன். உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் நடுவர், சட்டச் சொற்களுக்குப் பொருளை வரையறை செய்து நீதி வழங்குவது போல், இப்பொழுது கோசிக முனியாகிய நீதிபதி சட்டச் சொல்லுக்கும் பொருள் காண்கிறான். பெண்’ என்ற காரணத்தால்தானே இராமன் அம்பு செலுத்தாமல் தாழ்கிறான். அப்படியானால் பெண் என்று ஒருவரை வகைப்படுத்துவது கேவலம். அவருடைய உடல் அமைப்பை