பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 191 மட்டும் வைத்துக் கொண்டா? பெண்மை உடையவளே பெண் பெண்மை இயல்பு இல்லாத, பெண் உடம்பு மட்டும் பெற்ற ஒருவரை உடம்பால் மட்டும் மதிக்க வேண்டுமானால் பெண் என்று கூறலாம். ஆனால் பெண்ணுக்குரிய மரியாதையைத் தருதல் அறிவுடைமையாகாது. தாய்மைக் குணம் இல்லாத ஒருத்தி எவ்வாறு பெண் எனப்படுவாள்? எனவேதான், கோசிகன், தாடகை பெண் அல்லள் என்பதைக் குறிக்கப் பின்கண்ட காரணங்களை வரிசைப்படுத்துகிறான். தீது என்று உள்ளவை யாவையும் செய்பவள். (தாடகை வதைப்படலம்-3) வாண்மையே பெற்ற வன்திறல் ஆடவர் தோண்மையே இவள் பேர் சொலத் தோற்கும் ( "39)

      • 娜#砷 *学姆够哆●*中崛 *# 舱-பெரியோ ரொடும் மறம் கொடு. இத்தரை மன்னுயிர் மாய்த்து, நின்ற

அறம் கொடுத்தவள் (41) e * * * *e*s* m: *a a sa a * * * 44. * * * * * * * * * * *இவளைப்போல் நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஒர் கூற்றம் உண்டு கொல்?....................... ( "42) இத்துணையும் கூறிய பிறகுதான், இவள் சீறி நின்று இது செப்பவில்லை. ஈறு இல் நல்லறம் பார்த்துத்தான். இசைத்தேன் என்று முடித்தான் முனிவன். எனவே, பெண் என்ற சொல்லுக்கு இயல்பாக எதிர்பார்க்கப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை இவள் மாட்டு இல்லாதவை; அன்றியும் தாய்மைக்கு ஒவ்வாத கொலைத் தொழில் மேற்கொண்டவள், இவள் பெண் அல்லள் என்பதற்கு இத்துணை சான்றுகள் உண்டு. இதன் எதிராகப் பெண் என்பதற்கு வடிவம் ஒன்று மட்டுமே சான்று. எனவே இவளைக் கொல்லுதல்தான் முறை என்று முனிவனாகிய நீதிபதி முடிவு வழங்கினான்.