பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கம்பன் - புதிய பார்வை இராமன் செய்த முடிவு இவ்வாறு அவன் கூறியபிறகு இராமன் என்ன செய்ய முடியும்? இத்தனை வாதங்களையும் இராமன் ஏற்றுக் கொண்டதாகவோ, மனம் மாறியதாகவோ தெரியவில்லை. அப்படியானால் உன் வாதத்தை நான் ஏற்கவில்லை. இவள் பெண் என்பதை ஏற்றுக்கொண்டு கொல்லாமல் விட்டுவிடுகிறேன்' என்று கூறி விட்டுவிடலாம். அவ்வாறு செய்தால் தந்தையாகவும், தாயாகவும், வழிப்படுத்து வோனாகவும் இருக்கும் முனிவனின் ஆணையை மீறிய குற்றம் ஏற்படும். இந்த நிலையில் இராமன் ஒரு நல்ல முடிவுக்கு வருகிறான். புலனடக்கம் பயின்று அகங்கார மமகாரங்களை முழுவதுமாக ஒழித்த ஒருவன்தான் இதனைச் செய்ய முடியும்; இராமன் அதனைச் செய்கிறான். கோசிகன் வாதத்தை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதன் பயனாக மனம் மாறிவிடவும் இல்லை. அதே நேரத்தில் முனிவன் கட்டளையை மீறவும் விரும்பவில்லை. அது எவ்வாறு முடியும்? இராமனே இவ்விரண்டையும் விளக்கமாகக் கூறுகிறான். "முனிவர் பெருமானே! அறத்தின் மாறுபட்ட ஒரு சூழ்நிலை வந்தாலும், அதை நான் செய்ய வேண்டும் என்று நீ பணித்தால் உன் ஆணையை வேதம் என்று கொண்டு அதனைச் செய்து முடிப்பதுதான் அறம் செயும் வழியாகும்" என்ற பொருளில், ஐயன் அங்கு அதுகேட்டு, அறன் அல்லவும் எய்தினால், அது செய்க என்று ஏவினால், மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு என்றான் ( *45) உச்ச நீதிமன்றத்தில், நடுவர் ஒரு சட்டத்திற்குப் புதிய விளக்கம் தந்து அதன்படி தீர்ப்புக் கூறினால், அது வாதி, பிரதிவாதி என்ற இருவரையும் கட்டுப்படுத்தும் என்பதில்