பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 + கம்பன் - புதிய பார்வை உண்டு. மொழி என்பது, ஒருவர் உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றி வளர்வதற்கும், அந்த எண்ணங்களைப் பிறருடன் பங்கிட்டுக் கொள்வதற்கும் பயன்படும் கருவியாகும். எனவே இந்த மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னர்த் தோன்றிய நூல்கள் இன்றும் நம்மால் புரிந்துகொள்ளும் நிலையில் உள்ளன என்றால், அன்றே இந்த மொழி பெருவளர்ச்சி பெற்றிருந்தது என்பதுதான் பொருள். அகில உலகமும் இன்று மதித்துப் போற்றும் திருவள்ளுவர் தம் கருத்தை வெளியிட நன்கு வளர்ச்சி பெற்ற மொழியைத்தான் பயன்படுத்தி இருப்பார். அந்த மொழியை இன்றுகூட அகராதியின் உதவி இல்லாமல், பெரும்பகுதியை நாம் புரிந்து கொள்கிறோம் என்றால், அந்த மொழி அதிகம் மாறுபாடு இல்லாமல் இரண்டா யிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதுதானே பொருள்! பூரண வளர்ச்சி பெற்றிருந்தால்தான் இத்தகைய நிலை ஒரு மொழிக்கு ஏற்பட முடியும். எனவே, இத் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டே கூட முழு வளர்ச்சி பெற்று, பண்பாடு நாகரிகம் நிறைந்த அன்றையத் தமிழனின் எண்ண ஓட்டங்கட்கு வடிவு கொடுக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தது என்பது உறுதி யாகிறது. - பழமையால் பெற்ற சிறப்பு இத்தகைய ஒரு மொழியில் இலக்கியம் தோன்றும் பொழுது அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாய் அமைந்திருத்தல் இயல்பேயாம். பின்னர்த் தோன்றுகின்ற இலக்கியங்கள் முன்னர்த் தோன்றிய இலக்கியங்களிலிருந்து தேவையானதும், நிலையானதுமான உயிர்ச்சத்தை ஏற்றுக்கொண்டுதான் தோன்றும் பராரியாக உள்ள ஒரு மொழியில் அத்தி பூத்தது போன்று என்றோ ஒருநாள் ஒர் இலக்கியம் தோன்றினால், அது முன்பின் தொடர்பு