பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4. அ. ச. ஞானசம்பந்தன் 193 ஐயமில்லை. ஆனால், இரு சாராரும் அத்தீர்ப்பை முழுமனத்துடன் ஏற்க வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. அதற்குக் கீழ் படிதல் வேறு; அதனை ஏற்றுக்கொள்ளுதல் வேறு. விசுவாமித்திரன் தீர்ப்புக்கு இராகவன் கீழ்ப்படிந்தான்; ஆனால் அதனை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் நியாயம் என்று கண்டதைக்கூடச் சமுதாய நலம் கருதி விட்டுக்கொடுத்தல் பண்புடையார் செய்யும் செயலாகும். இதனையே இராகவனாகிய பெருந்தகை செய்தான். தருமசங்கடத்தில் இராமன் மேற்கொண்ட முடிவும், அதனால் வரும் பயன்களின் நன்மை, தீமை ஆகிய இரண்டும், முனிவனைச் சேர்ந்துவிடுகின்றன. தன்னின் மேம்பட்ட அதிகாரி, தான் சரி என்று நினையாத ஒன்றைச் செய்க என்று ஏவினால், தன் மறுப்பை அறிவித்துவிட்டு, மேலும் அவர் வற்புறுத்தி னால், செய்வதே முறை. அதேநேரத்தில், எய்தினால், நீ ஏவினால் என்ற இரண்டு ஆல் விகுதிகளின் மூலம், முனிவனுக்கு உரிய மதிப்பைத் தருகிறான் சக்கரவர்த்தித் திருக்குமாரன். அத்தகைய சூழ்நிலை வராது; வந்தாலும் தவறு செய்யுமாறு நீ விடமாட்டாய் என்ற குறிப்புப் பொருளைத் தருவதற்காகவே இரண்டு ஆல் விகுதிகள் இடம்பெற்றுள்ளன. தருமசங்கடம் என்பது நம் போன்ற சராசரி மக்களுக்கு மட்டுந்தான் வரும் என்று எண்ண வேண்டா. கடவுளே மனிதனாகப் பிறந்தால் அவனையும் அது விடாது என்பதை அறிவிக்கவே, இத்தகைய ஒரு நிகழ்ச்சியைப் படைத்துக் காட்டுகிறான் கம்பன். வான்மீகியில் தாடகைவதம் இராமனின் உண்மை நிலையைக் காட்டும் முறையில் இல்லை. விசுவாமித்திரன் சொன்னவுடன் இராம இலக்குவர்கள் தாடகையின் கைகால் முதலிய உறுப்புகளை ஒவ்வொன்றாக அறிகின்றார்கள். அவ்வாறு செய்வதால் தாடகையின் வன்மையை அறிவிக்க முடிந்ததே தவிர, அவளைக் கொல்லச் சோதரர்கள் இருவரும் பல அம்பு