பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 + கம்பன் - புதிய பார்வை களைச் செலவழித்ததாகச் சொல்லும் வான்மீகக் கதை, தான் படைக்கும் இராமனுக்குப் பொருந்தாது எனக் கவிஞன் எண்ணுகிறான். எனவே, ஒரே அம்பால் அவளை நமனுலகு அனுப்புகிறான் கம்பன். மனிதனாக வந்தால்? கடவுள் மனிதனாக வந்தால், மனிதர்கட்குரிய புலனடக்கம் முதலியவற்றில் தலைசிறந்து நிற்க வேண்டும். அதுவே ஏனையவர்கள் அவனைப் பின்பற்றுவதற்குரிய வழி என்று நினைத்த கம்பன், இவ்வாறு தாடகை வதத்தைப் படைத்துக் காட்டுகிறான். கடவுள் மனிதனாக வந்து செயற்கு அரிய செயல்களைச் செய்வது மட்டும் போதாது. மனிதர்களுக்குள்ள இன்பதுன்பம், மகிழ்ச்சிதுயரம் ஆகிய அனைத்திலும் இவ்வுலகச் சட்டங்கட்கு ஏற்ப ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபடும்போது அவனுடைய புலனடக்கம் காரணமாக அவன் நடந்துகொள்ளும் முறையால் உலகத்தார்க்கு முன்மாதிரியாகவும், எடுத்துக் காட்டாகவும், அம்மனிதன் ஆகிறான். இவ்வாறு தலைவனைப் படைப்பதே கவிஞன் நோக்கம். அந்த நோக்கத்தில் கவிஞன் முழு வெற்றி பெற்றுவிடுகிறான். மனிதனாக வந்த பரம்பொருள், இந்த மனித உலகச் சட்டதிட்டங்கட்குக் கட்டுப்பட்டு, பழி முதலியன வராமல் தன் செயல்களை நடத்திச் செல்லுமாறு கதையைக் கூறுகிறான் கம்பன் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டைக் காணலாம். பிராட்டியைத் தேடி வருகின்ற சோதரர்கள் கவந்தனிடம் அகப்பட்டுப் பிறகு அவனைக் கொன்ற நிலையில் அவன் தேவ வடிவம் பெற்ற இராமனை நோக்கிக் கூறுகிறான். "குற்றமற்ற சிவனது ஆண்மை பற்றிக் கூற வேண்டுமா? தாமரைத் தவிசில் உறையும் நான்முகன் படைத்த அத்தனையையும் ஒருவனாகவே நின்று சங்காரம் செய்யும் ஒருவனான அச்சிவனே, வன்மை பொருந்திய