பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 195 பூதகணங்களுடன் உறைவது உண்மையல்லவா? (எனவே, நீ எத்துணை ஆற்றல் பெற்றிருப்பினும், துணைவலி தேட வேண்டும்) என்ற கருத்தில், பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது ஏன்? பதும பீடத்து உழிப்பெரும் தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே ஒழிப்பருந் திறல் பல்பூத - கணத்தொடும் உறையும் உண்மை? (கவந்தன் படலம்-53) என்று கூறிவிட்டு, மேலே இராமன் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறான். ஆயது செய்கை என்பது அறத்தை நெறியின் எண்ணி தீயவர்ச் சேர்க்கி லாது செவ்வியோர் சேர்த்து, செய்தல்; தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு அன்னான் ஏயது ஓர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி, கதிரவன் சிறுவன் ஆன கனக வாள்நிறத்தி னானை எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், ஈண்ட, வெதிர் பொரும் தோளினாளை நாடுதல் விழுமிது என்றான். (கவந்தன் படலம் - 54, 55) (செய்ய வேண்டிய செயல் என்ன என்பதை அற அடிப்படையில் ஆராய்ந்து, தீயவர்களைத் துணைக் கொள்ளாமல், நேர்மையானவர்களைத் துணைக்கொண்டு