பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கம்பன் - புதிய பார்வை செல்வதே சரி. சவரி என்பவளைக் கண்டு அவளிடம் வழி கேட்டு, இரலைக்குன்றம் அடைந்து, சூரியன் மகனான வெண்ணிறமுடைய சுக்ரீவனைக் கண்டு, தழுவிக்கொண்டு, நட்புப் பூண்டு அவனிடம் சிலநாள் தங்கி அவன் உதவியுடன் மூங்கில் போன்ற தோளை யுடைய பிராட்டியைத் தேடலே சிறந்ததாம்.) கவந்தன் தனக்கு நற்கதி அளித்த இராமனிடம் நன்றி பாராட்டிக் கூறிய அறிவுரையாகும் இவை. இதில் ஒரு வியப்பு என்னை எனில், வயிற்றில் வாயை உடைய பயங்கரமான அந்தக் கவந்தன் என்ற கொடியோன், தன் சுயவடிவம் (கந்தர்வன்) பெற்ற பின்னர்க் கூறிய இந்த அறிவுரையை சக்ரவர்த்தித் திருமகன் ஒர் எழுத்தும் விடாமல் பின்பற்றினான். ஏன் இவ்வாறு கூறினான்? இவன் யார் நமக்கு புத்தி கூறுவதற்கு? என்றெல்லாம் அப்பெருமான் நினைக்கவே இல்லை. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (திருக்குறள்-423) என்ற அறநூல் விதிப்படி, கவந்தன் அறவுரையை அப்படியே பின்பற்றுகிறான் இராமன். அறவுரை கூறும் கவந்தன், ஒரு துணுக்கத்தையும் கூறுகிறான். துணை இல்லாமல் யாரும் அரிய காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால் அதற்காகத் தீயவர்களின் உதவியை நாடி வினை முடித்துக்கொள்வேன் என்று நினைப்பது தவறு. இவ்வாறு கவந்தன் இரலைக் குன்றத்தில் வாழும் சுக்ரீவனை அடைந்து தழுவி, நட்புக் கொண்டு, அவனிடம் தங்கித் தேவியைப் பின்னர்த் தேடும் வேலையை மேற்கொள்ளு மாறு கூறினான். வழியும் பயனும் அண்ணனுக்கு அஞ்சி ஒளிந்து வாழும் சுக்ரீவனைத் துணையாகச் சேர்த்துக் கொள்ளுமாறு கூறியது