பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 + கம்பன் - புதிய பார்வை கம்பனைப் பொறுத்தவரை, அவனுடைய தலைவன் தவறான வழியை மேற்கொண்டு எத்துணைச் சிறந்த பயனையும் அடைய விரும்பமாட்டான். பிறன் மனையைக் கவர்ந்து சென்ற தவறுக்காக ஒருவனைத் தண்டிக்கச் செல்பவன் யாரைத் துணையாக அழைப்பது? அதே குற்றத்தைச் செய்துகொண்டிருக்கும் மற்றொருவனையா துணைக்கழைப்பது? பண்புடைய எந்த மனிதனும் இதனைச் செய்ய விரும்பமாட்டான். கடவுளே மனிதனாக வந்து அறத்தின் மூர்த்தியாக நின்று செயல்படும்போது, இத்தகைய தவற்றை ஒருநாளும் செய்யவேமாட்டான். இதுவே வாலியை விட்டுச் சுக்ரீவனை நட்பு கொண்டதன் உட்கருத்தாகும். ஒரு கல்லில் பல மாங்காய் இனி, இத்துணைக் கடுமையான சோதனையாக அமையாமல் சுமாரான சோதனையான ஒரு தருமசங்கட நிலையையும் கவிஞன் படைத்துக் காட்டுகிறான். போர் அனைத்தும் முடிந்து பிராட்டியை அழைத்துக்கொண்டு அயோத்திக்கு புறப்பட வேண்டிய நேரத்தில், பிராட்டியைச் சினந்து தீப்புகச் செய்கிறான் கருணை வள்ளல். தீப்புகுந்து மீண்டவளை ஏற்றுக்கொள்ளுதலே முறை என்று நான்முகன், சிவன் முதலானவர்கள் கூறிவிட்ட பிறகு, தசரதனை இவ்வுலகிடை அனுப்பி, அவன்மூலம் இராமனைத் தேற்ற முடிவு செய்து, தேவர்கள் தசரதனை இங்கு அனுப்புகின்றனர். பூமியில் வந்த தசரதனை இராகவன் வீழ்ந்து வணங்கினான். வணங்கிய மைந்தனை எடுத்து மார்புறப் புல்லிய தசரதன், "மகனே அன்று கேகயன் மகள் கைகேயி கொண்ட இரண்டு வரங்கள் என்னும் கூர்மையான வேலாயுதங்கள் இன்றுவரை என் மார்பின் உள்ளேயே தங்கிவிட்டன. என்னைக் கொன்றபிறகும், அவை என்னை விட்டு நீங்கவில்லை. இன்று உன்னைத் தழுவும்பொழுது, உன் மார்பு என்னும் காந்தம்