பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 199 என் மார்பில் பட்டதால், அந்த இரும்பு வேலாயுதங்கள் இப்பொழுது பறிக்கப்பட்டுவிட்டன" என்று பேசுகிறான். அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில்வேல் இன்று காறும் என் இதயத்தினிடை நின்றது; என்னைக் கொன்று நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன் குலப்பூண் மன்றல் ஆகம்.ஆம் காந்தமா மணி இன்று வாங்க. (மீட்சிப்படலம்-17) திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்தும், பரதன் என்ற மகனைப் பெற்றும், பின்னர் ஏதோ ஒரு காரணத் தால் உயிருடன் இருக்கும்பொழுதே தசரதன் தன் மனைவியாகிய கைகேயியை, "இவள் என் மனைவியும் அல்லள்; இவள் மகன் பரதனையும் மகன் என்று உன்னேன்" என்று ஒதுக்கிவிட்டான். கைகேயி வரம் என்ற பெயரில் செய்த கொடுமையை அவனால் மறக்க இயலாது. மந்திரக் கிழவர்களிடம் அவன் கூறியது போல, அரசைத் துறந்து சென்று, புலன்களை அடக்கித் தவம் செய்யும் வாய்ப்பும் அவனுக்குக் கிட்டவில்லை. எனவே, மனத்துள் இருந்த வெறுப்பு, சினம், காழ்ப்புணர்ச்சி என்ற குறைகளுடனேயே தசரதன் இறக்க நேரிட்டுவிட்டது. இறுதியாக அவன் மனத்தில் இருந்த உணர்ச்சிகள் அவனை முன்னேற்றக் கூடியவை அல்ல. ஒருவன் இறக்கும்பொழுது, இறுதியாக அவன் மனத்தில் நிறைந்திருக்கும் எண்ணங்களே, அவனுடைய அடுத்த பிறப்பிற்கோ, விடுதலைக்கோ வழிவகுக்கும் என்பது இந்நாட்டவர் நம்பிக்கை. இந்தி அடிப்படையில் பார்த்தால் தசரதன் இராமனைப் பெற்றுங்கூட, முழு விடுதலை பெற வாய்ப்பு இல்லை. எனவே அவன் மனத்தினுள் உறையும் கொடிய உணர்வுகள் அகல வேண்டும். இதனைக் கருதிக் கவிஞன் இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்கிறான். அதே நேரத்தில் இராமனுடைய மனத்தில் இக் கொடிய