பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கம்பன் - புதிய பார்வை உணர்ச்சிகள் எதுவும் மருந்துக்குக் கூட இல்லை என்பதையும் காட்ட வேண்டும். இவை இரண்டு பயன்களும் ஒருபுறம் இருக்க, தருமசங்கடமான ஒரு நிலையில் புலனடக்கமும், கற்றறிவும் உடைய ஒருவன் எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும் காட்ட வேண்டும். இத்தனைப் பயன்களையும் ஒரே நிகழ்ச்சியில் கவிஞன் வைத்துக் காட்டுகிறான். மகனைத் தழுவி மகிழ்ந்து, மருகிக்கு அமைதி கூறிய தசரதன், மகனிடம், "நீ வேண்டிய வரத்தைக் கேள்" என்று பணிக்கிறான். இராமன் மறுத்தும் விடாமல், "ஏதாவது உனக்கு விருப்பமானதைக் கேள்" என்கிறான். இப்பொழுது தந்தையின் விருப்பப்படியே மைந்தன் வரம் கேட்கிறான். "தீயவள் என்று நீதுறந்துவிட்ட என் தெய்வமும், அவன் மகனும், எனக்குத் தாயும் தம்பியும் ஆகும் வரம் தருக" எனக் கேட்டான். அப்படி அவன் கேட்டவுடன், உலக உயிர்கள் அனைத்தும், அருள் உள்ளம் உடைய இராமனின் பண்பை நினைந்து, அவனை வாழ்த்தினவாம். ஆயினும் உனக்கு அமைந்தது உரைஎன, அழகன் தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும், தம்பியும், ஆம் வரம் தருக! எனத் தாழ்ந்தான். வாய்திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர் எலாம் வழுத்தி. (tட்சிப்படலம்-128) கம்பநாடன் தன் கவிதைத்திறம் முழுவதையும் இந்த ஒரு பாடலில் வைத்துக் காட்டுகிறான். ஸ்திதப் பிரக்ஞனான இராமனுக்குக் கைகேயியின்பால் எவ்வித வெறுப்போ, பகையோ, சினமோ இல்லை. எனவே, அவள் தாய் என்பதையும், தன்னை அன்புடன் வளர்த்தவள் என்பதையும் மறக்கவில்லை. அதேநேரத்தில், தந்தை அவளை ஒதுக்கியதை ஏற்கவும் கூடவில்லை. விதியின் பயனே பயன். இதற்கு என்னை மனம் நோவது? என்று தம்பி இலக்குவனுக்கு இராமன் கூறியது, உண்மையில் அவன் மனப்பூர்வமாக